ஒசாமா பின்லேடன் குறித்து பாகிஸ்தான் அரசு கைது செய்துள்ள மருத்துவர் சகில் அப்ரிதான் முக்கிய தகவல் கொடுத்ததாக அமெரிக்கா முதல் முறையாக வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளது.
அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் லியோன் பெனட்டா, சிபிஎஸ் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் இதனைத் தெரிவித்துள்ளார். இது ஞாயிறன்று ஒளிபரப்பாகிறது.
அபோதாபாத்தில் தங்கியிருப்பது ஒசாமாதான் என்பதை அவரது மரபணு மூலம் அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏவிடம் உறுதி செய்ததும் சகில் அப்ரிதான். இவர் மீது பாகிஸ்தான் குற்றம்சாட்டி கைது செய்திருப்பதற்கு மிகவும் வருந்துகிறேன் என்றும் பெனட்டா அதில் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் அபோதாபாத் வளாகத்தில் ஒசாமா தங்கியிருந்தது பற்றி பாகிஸ்தானுக்கு முன்பே தெரியுமா என்பதற்கு போதுமான ஆதாரம் இல்லை என்றும் பெனட்டா தெரிவித்துள்ளார்.
ஒசாமா – ஜிகாத் – முதல் திரைப்படம்:- சுவாரசியமான காணொளி
இதனிடையே அப்ரிதியை விடுவித்து அமெரிக்காவிடம் ஒப்படைப்பதன் மூலம் அப்ரிதி விவகாரத்தில் சுமூகத் தீவு காண முடியும் என்று பாகிஸ்தான் நம்புவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒசாமா பாகிஸ்தானில் பதுங்கியிருந்ததை கண்டுபிடித்தது எப்படி?: கட்டவிழ்த்தது அமெரிக்கா
பதிந்தவர்:
ஈழப்பிரியா
28 January 2012



0 Responses to ஒசாமா பாகிஸ்தானில் பதுங்கியிருந்ததை கண்டுபிடித்தது எப்படி?: கட்டவிழ்த்தது அமெரிக்கா