நாகை மாவட்டம் நாகூர் விடுதலைச்சிறுத்தைகள் நகர செயலாளர் ரெங்கையன் (35). இவர் காரைக்காலில், மர்மநபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இதனையடுத்து, அவரது கட்சியினர் பெரும் வன்முறையில் ஈடுபட்டனர்.
10க்கும் மேற்பட்ட கடைகளை அவர்கள் அடித்து நொறுக்கியதுடன், அரசு பஸ் ஒன்றின் மீதும் கல்வீசித் தாக்குதல் நடத்தினர்.
சாலையில் செல்லும் வாகனங்கள் மீதும் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தினர்.
இதன்காரணமாக, அங்கு பெரும் பரபரப்பு நிலவிவருகிறது. பாதுகாப்பிற்காக, போலீசார் பெருமளவில் குவிக்கப் பட்டுள்ளனர்.



0 Responses to விடுதலை சிறுத்தைகள் நகர செயலாளர் படுகொலை