Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வங்கக்கடலில் இந்தியா - சிறிலங்கா கடற்படையினரின் கூட்டு சதியினால் 16.01.1993 அன்று வீர வரலாறான கேணல் கிட்டு உட்பட 10 வேங்கைகளின் 19ஆம் ஆண்டு நினைவுநாள் நேற்று ஜெர்மனி பெர்லினில் இடம்பெற்றது.

வீரகாவியமான மாவீரர்களான லெப்ரினன் கேணல் குட்டிசிறி, மேஜர் வேலன் அல்லது மலரவன்,கடற்புலி கப்டன் ஜீவா,கடற்புலி கப்டன் குணசீலன் அல்லது குணராஜ், கடற்புலி கப்டன் நாயகன்,கடற்புலி கப்டன் றொசான், கடற்புலி லெப்ரினன் அமுதன், கடற்புலி லெப்ரினன் நல்லவன்,கடற்புலி லெப்ரினன் தூயவன் ஆகிய மாவீரர்களின் 19 ஆம் ஆண்டு நினைவு நாளில் பொதுச்சுடர் நிகழ்வை தொடர்ந்து சுடர்வணக்கம், அகவணக்கம் மக்களால் செலுத்தப்பட்டது.

அதை தொடர்ந்து உணர்வு பூர்வமாக எழுட்சிப் பாடல்கள் பாடப்பட்டது. இந்நிகழ்வில் தாயக மக்களுக்கு கரம் கொடுக்கும் வகையில் சில உதவித்திட்டங்கள் அத்தோடு அரசியல் வேலைத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதனோடு, முத்துக்குமார் தொடக்கம் முருகதாஸ் வரை தம்மை தாமே தீயினில் ஆகுதியாக்கிய தியாகச் சுடர்கள் நினைவாகவும் வணக்க நிகழ்வு உணர்வு பூர்வமாக முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

காணொளி



0 Responses to ஜெர்மனியில் நடைபெற்ற கேணல் கிட்டு உள்ளிட்ட 10 வேங்கைகளின் 19ஆம் ஆண்டு நினைவுநாள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com