சென்ற வெள்ளிக்கிழமை இத்தாலிய கரையோரத்தில் கவிழ்ந்து போன கோஸ்ரா கொன்கோடியா என்ற உல்லாசப்பயணக் கப்பல் இப்போது உல்லாசப் பயணிகளை அதிகமாகக் கவர்ந்திழுக்கிறது. நீரில் மூழ்கினாலும் பாட்டத்தில் கிடக்கும் கப்பலின் அரைப்பங்கு கடலுக்கு வெளியில் தெரிகிறது. இதன் காரணமாக கப்பலைப் பார்ப்பதற்கு ஆயிரக்கணக்கான உல்லாசப் பயணிகள் சரிந்து கொண்டிருக்கிறார்கள். கப்பலுக்கு மிக அருகில் போய் பார்க்க அனுமதிக்கப்படுவதால் உல்லாசப்பயணிகளை அது வெகுவாகக் கவர்ந்துவிட்டது.
கப்பலுக்கு அருகே நின்று புகைப்படம் எடுத்தல், கப்பலின் மேல் தளத்தில் விற்பனையாகும் மாலை உணவை சுடச்சுட வாங்கி உண்ணுதல் போன்றன உல்லாசப் பயணிகளுக்கு பாரிய அனுபவமாக உள்ளது. தீவுகளுக்கு உல்லாசப் பயணம் போகும் மக்கள் இப்போது, இத்தாலிய தீவொன்றின் அருகே கப்பல் ஒன்றே தீவு போலக் கிடப்பதால் பெரும் பரபரப்படைந்துள்ளனர்.
ஏற்கெனவே கடலில் மூழ்கிக் கிடக்கும் டைட்டானிக் கப்பல் உல்லாசப் பயணிகளுக்கு பெரும் பரபரப்பூட்டி வருகிறது. கடலின் அடியில் சென்று இதைப்பார்ப்பதற்கு பெருந்தொகை பணம் கொடுத்து வருகிறார்கள். மேலும் டைட்டானிக் திரைப்படம் கப்பலின் பெறுமதியைவிட பல நூறுமடங்கு பணத்தை உழைத்து கொட்டிவிட்டிருக்கிறது. அழிவு வந்துவிட்டதே என்று கலங்கிப் போகாமல் அந்த அழிவை ஆக்கமாக்கும் அரிய வாழ்வியல் கலை இதில் கலந்துள்ளது.
இப்போது டைட்டானிக் பாணியில் கோஸ்ரா கொன்கோடியா உல்லாசப்பயணிகளை கவர்ந்திழுக்கிறது. இதுபோல மேலும் பல கப்பல்களை கவிழ்த்து அதன் மேல் கோட்டல்களை கட்டி உல்லாசப் பயணிகளுக்கு ஒரு கிறுகிறுப்பு ஏற்படுத்த முடியுமா என்ற கோணத்தில் பலரைச் சிந்திக்க தூண்டியுள்ளது, கோஸ்ரா கொன்கோடியாவின் விபத்து.
சுமார் 4000 உல்லாசப் பயணிகளுடன் புறப்பட்ட கப்பலை மிகவும் முட்டாள்தனமாக கரைக்கு அருகே கொண்டு சென்று தரைதட்டி புரளவைத்த கப்பலின் தலைமை மாலுமி பிரான்சிஸ்கோ ஸெற்றினோ ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கப்பலின் அடியில் மாட்டுண்டுள்ள மேலும் 14 பேர் தேடப்பட்டு வருகிறார்கள். மரணித்தவர்கள் அனைவருடைய குடும்பங்களுக்கும், விலை மதிக்க முடியாத பிரமாண்டமான கப்பலின் உரிமையாளருக்கும் இவர் பதில் கூற வேண்டிய கடப்பாடுடையவராக இருக்கிறார். கப்பல் பயணிப்பதற்கான கடல் அடித்தள வரை படத்தில் இப்படியொரு திடல் இருப்பதாகக் காட்டப்படவில்லை என்று அவர் கூறுகிறார்.
கப்பலுக்கு மிக அருகில் போக வேண்டாமென அருகில் உள்ள ரொன்கன்ஸ்க தீவின் மேயர் கேட்டுள்ளார். இருப்பினும் கப்பலை பார்க்க அனுமதித்த மேயருக்கும், கவித்து கொட்டிய தலைமை மாலுமிக்கும் இத்தாலிய பத்திரிகையொன்று நன்றிகூறி கடிதம் எழுதியுள்ளது.
உபகதை :
வாழ்க்கையில் தோல்வியடைந்த ஒருவன் சாவதற்கு முன் கடைசி முயற்சியாக மனைவியின் தோட்டை விற்று ஆயிரம் இட்டலிகளை அவித்து, ஒரு கோயிலுக்கு அருகே கடை போட்டான்.
வியாபாரம் பெரிதாக நடக்கவில்லை.. சாகலாமா என்று யோசித்தான்.
இல்லை…
இட்டலிகளை அரைத்து உழுந்து வடையாக மாற்றினான்… ஓரளவு வியாபாரம் நடந்தது.
பின் எஞ்சிய வடையை அரைத்து பகோடாவாக மாற்றினான்.. அதிலும் அரைப்பங்கு விற்றது.
பின் கடைசியாக எஞ்சிய பகோடாவை அரைத்து சாம்பாராக்கினான்.. எல்லாம் முடிந்தது..
அவன் மனைவி காதில் தோடு வந்தது..
சில காலத்தில் அங்கே ஒரு பெரிய கோட்டல் வந்தது.. அதற்கு அவனே உரிமையாளனாக இருந்தான்.
அழிவை ஆக்கமாக்கி வாழ்ந்து காட்டிய இட்லி வியாபாரியின் கதை இது.
கோஸ்ரா கொன்கோடியா என்ற இட்லி இப்போது ஓட்டை விழுந்த வடையாகி வியாபாரம் பறக்கிறது..
அது பழைய இரும்புக்கு சாம்பாராக விற்பனையாகும்போது கப்பலின் மொத்த உற்பத்தி செலவும் கைக்கு வந்துவிடலாம்…
அழிவு ஆக்கத்திற்கு வழிகாட்டும் ஈழத் தமிழா...



0 Responses to இட்லியை அரைத்து வடையாக்கியவன் கதை அரங்கேறியுள்ளது...