முஸ்லிம் மக்களை யாழ் சமூகம் வரவேற்கவில்லையாம்... இதுதான் இதில் பேசியவர்களின் முதன்மையான குற்றச்சாட்டு பேசக்கூட உரிமையற்று, வெள்ளைவான் எப்போதும் வருமென அச்சத்தோடு வாழும் யாழ் குடா மக்களை நோக்கி, நிழல் யுத்தம் புரிய முயல்கிறது இந்த புத்திசீவிகள் கூட்டம். இன்று, மகிந்த சத்துரு சிங்காவும், ஜி.எ .சந்திரசிறியும் இராணுவ ஆட்சி நடாத்துவதை நாமறிவோம். 1995 இலிருந்து, சிங்கள இராணுவமே [99 % சிங்களவர்கள்] யாழ் குடாவை ஆட்சி செய்கிறது என்பதை இந்த 'புத்திமத்' களுக்கு [சிங்களத்தில் புத்திசீவிகளை இப்படித்தான் அழைப்பார்கள்] சுட்டிக் காட்டவேண்டிய அவசியமில்லை.
கடந்த 17 வருட காலமாக, வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களை சிங்களம் ஏன் குடியேற்றவில்லை? இந்தக் கேள்விக்கான பதிலை கையெழுத்திட்ட அனைவரும் கூற வேண்டும்.
யாழில் இருக்கும் அரச உத்தியோகத்தர்கள் தடுக்கின்றார்கள் என்று கூறுவது , ஏதோ அவர்களுக்கு எல்லா அதிகாரமும் இருப்பது போலவும், அங்கு மக்களாட்சி நடப்பது போலவும், சந்திரசிறியும், சத்துருசிங்காவும் சிவில் நிர்வாகத்தில் தலையீடு செய்யாமல் படை முகாமிலும், அரச விருந்தினர் மாளிகையிலும் முடங்கிக் கிடப்பது போலவும் இருக்கிறது இந்தப் புனைவுக் கதை.
ஒரு விடயத்தை தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள்.
ஒடுக்கும் சிங்களப் பேரினவாத அரசானது, அவர் என்ன சாதி, எந்தப் பிரதேசம், எந்த சிறுபான்மை தேசிய இனம் என்று பார்த்து ஒடுக்குவதில்லை. எதிர்வரும் தேர்தலில், குடாநாட்டு முஸ்லிம் மக்களின் வாக்கு வங்கியை குறிவைத்து, அரச தரப்பினரால் [எந்தக் குழு என்பதை நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள்] இந்த விவகாரம் கிளப்பப்படுகிறதோ என்கிற சந்தேகமும் எழுகிறது.
இதயச்சந்திரன்
அதிர்வு.
பிரித்தாளும் தொடர்கதை, தீபத்தில் அனாசின் கேள்வி நேரம்! (காணொளி இணைப்பு)
பதிந்தவர்:
தம்பியன்
18 January 2012

இதுள் யாரு கையெழுத்திட்டார்கள் என்பதல்லப் பிரச்சனை.பிரச்சனை, அந்த அறிக்கைபேசும் அரசியல்.அதன் பின்னாலுள்ள வியூகம்.இதை நகர்த்துவது நிர்மலாவோ அல்லது அந்த 70 நபர்களுமோ அல்ல.அந்த நபர்கள்சார்ந்தியங்கும் தளம்,அது முன்தள்ளும் அரசியல்,அதனுடாகவிருத்தியாகும் அமுக்கக் குழுக்கள்,இவற்றை முன்தள்ளும் அதிகார வர்க்கம்.
இவையூடாகத் தமிழ்பேசும் மக்களது இன்றைய அரசியற்றலைவிதியையும்,அவர்கள்மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட இனவழிப்பையும் மெல்ல நீர்த்துப்போக வைக்கும் இந்தத் திசை திருப்பும் வியூகத்தைக் குறித்தே சிந்தித்தாகவேண்டும்.
இதற்குப்பின் பாரிய அழிவுச் சக்தியும்-பிராந்திய ஆதிக்கமும்,அதுசார்ந்தியும் உள்ள நாட்டுப் பெரும்பான்மை இன நலன்நோக்கிய அரசியலும் இருக்கிறது.அது,இலங்கைச் சிறுபான்மை இனங்களை ஒன்றுடனொன்று மோதவைத்தலூடாகவொரு அரசியலை முன் தள்ளுவதால்,இதுவரை அழிப்பு அரசியலை செய்த பிரதான எதிரியான இலங்கை அரசையும்,அந்த அரசுக்குப் பின்னால் இருக்கும் ஆளும் வர்க்கத்தையும் திட்டமிட்டுக் காக்க முனைகிறது இந்த அறிக்கை.
யாழ்ப்பாண மக்களிடம் விடப்படும்கோரிக்கையைக் குறித்து மேலோட்டமாக விளங்க முனையும் எந்த நபரும் இலங்கைச் சிறுபான்மை இனங்களுக்குத் திட்டமிட்டுச் சூது நிரம்பிய அரசியலைக் கொண்டியக்குகின்றனர் என்பது இங்கிருக்கும் உண்மையாகும்.
வன்னியுள், கொத்துக்கொத்தாக மக்களை இரண்டு அரச ஜந்திரங்களும் வேட்டையாடியபோது,யாழ்ப்பாண மக்கள் அப்படியொரு உலகத்தைக் கேள்விப்பட்டதாகவோ அன்றி வன்னியென்பது தமக்குப்பக்த்தில்தாம் இருக்கிறதாகவோ உணரத்தலைப்பட்டார்களா?
தமது மக்களில் கணிசமானவர்களை இனவாதச் சிங்கள அரசும்,புலியும் மாறி மாறி வேட்டையாடியபோது,அதைக் குறித்துக் கவனத்தைக் குவிக்கவோ அதற்கெதிராக அணிதிரளவோ முடியாதவொரு இராணுவக் காட்டாச்சிக்குள் இருத்தி வைக்கப்பட்ட யாழ் மாவட்ட மக்களிடம்போய், "இஸ்லாமியர்களது மீள் குடியிருப்பு,இசைந்து வாழ்தல்-நல்லிணக்கம்" என வகுப்பெடுப்பது மிகத் தந்திரமானதென்பதை எந்தச் சிறிய பாலகர்களும் அறிய முடியும்.
இங்கு எந்த நபர் கையெழுத்திட்டாலும்,அது குறித்த விவாதமாக இதை நகர்த்துவது விவேகமில்லை!
அதன் பின்னாலுள்ள அரசியலைக் குறித்தே விவாதித்து அம்பலப்படுத்தியாகவேண்டும்.
ஒவ்வொரு நபரும் தனத்து வர்க்கவுணர்வுக்கொப்பவே உலகக் கண்ணோட்டத்தை வளர்த்திருப்பார்.அதைத் தாண்டியவொரு பரந்துபட்ட மக்களது நலனை முன்தள்ளுவதென்பது வர்க்கச் சமுதாயத்தில் இயலாதகாரியம்.எனவே,இனவொடுக்குமுறை நிகழும் ஒரு நாட்டில்-திட்டமிட்டு இனப்படுகொலையைக் கட்டவிழ்த்துவிட்டவொரு நாட்டில், இத்தகைய பின்புலத்தை அடியோடு மறைத்துக்கவனத்தைத் திசை திருப்பும் இந்த அரசியலைக் கேள்விக்குட்படுத்துங்கள்.
வன்னியிலும்,தமிழர் தேசமெங்கும் இனவழிப்பைக் கட்டவிழ்த்துவிட்ட இலங்கை அரசானது, அனைத்து அழிவுவாத அரசியலுக்கும்(வடபுலத்திலிருந்து முஸ்லீம்கள் துரத்தப்பட்டதற்கும்) காரணமானது.இந்த இலங்கையினது அதிகாரத் திமிரைத் தனக்கேற்ற வகையில் பயன்படுத்த விரும்பிய இந்தியப் பிராந்திய நலனும்-மேற்குலக-அமெரிக்க நலன்களும் இலங்கை வாழ் இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளைத் தமக்கேற்பப் பயன்படுத்தி வருகின்றன.இதன் உச்சக்கட்டமே,இப்போது நிர்மலா தலைமையில் திசை திருப்பும் அரசியலாக மேலெழுகிறது.
தமிழ்பேசும் மக்களுக்கெதிராக நிகழ்ந்த வன்னிப்படுகொலைக்குத் தார்மீக பொறுப்பேற்க வேண்டிய இலங்கை அரசு,தமிழ்பேசும் மக்களிடம் மன்னிப்பும்,அவர்களது உரிமைக்கு உத்தரவாதமும்-பலகோடி நஷ்ட ஈடும் செலுத்தித் தமிழ்பேசும் மக்களுக்கு அரசியல் தீர்வை க் கொடுக்குவேண்டிய நிலையில்-அப்படித் தள்ளப்பட்டவொரு நிலையில்-அதை மறைத்துக் கவனத்தையும்,அரசியல் நகர்வையும் திசை திருப்பிச் சிறுபான்மை இனங்களைத் தமக்குள் அடிபட வைக்கும் இந்தப் பெரும்பான்மை இன நலன்சார்ந்த வியூகத்தை அறியாத புள்ளியைத்தாம், தனிநபர்களது கையெழுத்துப்பற்றிய உரையாடலில் நகர்த்திக் கொண்டிருக்கிறீர்கள். இதைவிட்டு மேலே செல்லுங்கள் கற்றறிந்தோரே!
அவர் கையெழுத்திட்டாலென்ன அல்லது இவர் கையெழுத்திட்டாலென்ன அதனூடாக நகர்த்தப்படும் அரசியல் நலன்கள் என்ன,அவை எந்த வர்க்கத்துக்குச் சார்பானது என்பதிலிருந்து,இனங்களுக்கிடையிலான முரண்பாட்டைக் கவனப்படுத்திக்கொள்வதுதாம் அவசியமாகிறது.இந்தியாவாலும்,உலக தேசங்களாலும்,பழிவாங்கப்பட்ட தமிழ்பேசும் மக்கள் சிங்கள இனவாத அரசால் இனப்படுகொலைக்குட்பட்டார்கள்.அந்தப் படுகொலைக்கு எதிரானவொரு அரசியலையும்,பாதிக்கப்பட்ட மக்களுக்கான நியாயத்தையும் வழங்க முடியாதவொரு சூழலில்,பாதிக்கபர்பட்ட மக்களிடமே சென்று அவர்களால் இஸ்லாமியர்கள் துரத்தப்பட்டார்கள்-அழிக்கப்பட்டார்கள் என்று வகுப்பெடுத்து,அவர்களாலேதாம் முஸ்லீம்கள் அரசியல் விழிப்புணர்வடைய வைக்கவேண்டுமென்பதும்,பின் தமிழர்களும்,இஸ்லாமியர்களும் சேர்ந்து இலங்கை அரசிடம் தமதுரிமைக்காகப் போராடுவதென்பதும் திட்டமிட்ட சதி.
அரசு என்ற மிகப்பெரிய அடக்குமுறைக் கருவியானது இங்கு தப்ப வைக்கப்பட்டுச் சிறுபான்மை இனங்கள் ஏமாற்றப்படுகிறார்கள். இலங்கை அரச ஆதிக்கமானது தமிழ்ப் பிரதேசமெங்கும் நிலைப்படுத்தப்படும்போது,தமிழ்பேசும் மக்களுக்குள் நிகழ்வது அதிகாரமென்பதா?
பூப்காவை அண்மித்துச் சிந்திப்பவர்களுக்கு இஃது:
பூப்காவை மீளக்கொணர்ந்தால், அதிகாரம் என்ற ஒன்றை விசாலமாக்க முடியாது.அல்லது, கறாராக விளங்கப்படுத்த முடியாதது.அது,நிலவாதது.அதிகாரம் என்ற ஒன்றில்லை!மாறாக, வித்தியாசமான வியூகத்துள்-மூலோபாயத்துள் தொடந்தியங்கும் அதிகாரத்துவ நிலைதாம் உண்டு.ஆக,பூப்காவின் கருத்துப்படி: "பொதுமையான அதிகாரமென்பது கிடையாது.அதிகாரத்துவ முறைமையும் இல்லை! அரச ஆதிக்கம்-அதிகாரமோ அன்றி அதன்வழியாகவியங்கும் நிறுவனப்பட்ட அதிகாரத்துவ மையமோ இல்லை. இதற்கெதிராக, பன்மைத்துவத்துக்குட்பட்ட பலப்பரீட்சையின் எல்லைக்குள் இயங்கும் மக்கள் கூட்டம்,இயக்கங்களே நிலவ முடியும்.
மீளவும்,இதை இலகுவாகச் சொடுக்குவோமானால்:"நிறுவனப்பட்ட அதிகாரம் என்பது இல்லை.அதிகாரம் என்பது ஒரு கட்டமைவும் இல்லை.அல்லது ஒரு சர்வ வல்லமைக்குட்பட்ட சர்வ வல்லமையாளனும் இல்லை. அதிகாரம் என்பதன் பெயர்,ஒரு சமுதாயத்துள்குழப்பமுடைய வியூகங்களாகவும்-சூழல்கள் ஆகவுமே அது இயங்குகிறது. இதற்குள்,எந்த அதிகாரத்தை எவர் கொண்டிருக்கிறார்? இது பூப்காவை அண்மித்தியங்குபவர்கள் பதில் சொல்லவேண்டும். இதுள் யாரு கையெழுத்திட்டார்கள் என்பதல்லப் பிரச்சனை.பிரச்சனை, அந்த அறிக்கைபேசும் அரசியல்.அதன் பின்னாலுள்ள வியூகம்.இதை நகர்த்துவது நிர்மலாவோ அல்லது அந்த 70 நபர்களுமோ அல்ல.அந்த நபர்கள்சார்ந்தியங்கும் தளம்,அது முன்தள்ளும் அரசியல்,அதனுடாகவிருத்தியாகும் அமுக்கக் குழுக்கள்,இவற்றை முன்தள்ளும் அதிகார வர்க்கம்.
இவையூடாகத் தமிழ்பேசும் மக்களது இன்றைய அரசியற்றலைவிதியையும்,அவர்கள்மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட இனவழிப்பையும் மெல்ல நீர்த்துப்போக வைக்கும் இந்தத் திசை திருப்பும் வியூகத்தைக் குறித்தே சிந்தித்தாகவேண்டும்.
இதற்குப்பின் பாரிய அழிவுச் சக்தியும்-பிராந்திய ஆதிக்கமும்,அதுசார்ந்தியும் உள்ள நாட்டுப் பெரும்பான்மை இன நலன்நோக்கிய அரசியலும் இருக்கிறது.அது,இலங்கைச் சிறுபான்மை இனங்களை ஒன்றுடனொன்று மோதவைத்தலூடாகவொரு அரசியலை முன் தள்ளுவதால்,இதுவரை அழிப்பு அரசியலை செய்த பிரதான எதிரியான இலங்கை அரசையும்,அந்த அரசுக்குப் பின்னால் இருக்கும் ஆளும் வர்க்கத்தையும் திட்டமிட்டுக் காக்க முனைகிறது இந்த அறிக்கை.
யாழ்ப்பாண மக்களிடம் விடப்படும்கோரிக்கையைக் குறித்து மேலோட்டமாக விளங்க முனையும் எந்த நபரும் இலங்கைச் சிறுபான்மை இனங்களுக்குத் திட்டமிட்டுச் சூது நிரம்பிய அரசியலைக் கொண்டியக்குகின்றனர் என்பது இங்கிருக்கும் உண்மையாகும்.
வன்னியுள், கொத்துக்கொத்தாக மக்களை இரண்டு அரச ஜந்திரங்களும் வேட்டையாடியபோது,யாழ்ப்பாண மக்கள் அப்படியொரு உலகத்தைக் கேள்விப்பட்டதாகவோ அன்றி வன்னியென்பது தமக்குப்பக்த்தில்தாம் இருக்கிறதாகவோ உணரத்தலைப்பட்டார்களா?
தமது மக்களில் கணிசமானவர்களை இனவாதச் சிங்கள அரசும்,புலியும் மாறி மாறி வேட்டையாடியபோது,அதைக் குறித்துக் கவனத்தைக் குவிக்கவோ அதற்கெதிராக அணிதிரளவோ முடியாதவொரு இராணுவக் காட்டாச்சிக்குள் இருத்தி வைக்கப்பட்ட யாழ் மாவட்ட மக்களிடம்போய், "இஸ்லாமியர்களது மீள் குடியிருப்பு,இசைந்து வாழ்தல்-நல்லிணக்கம்" என வகுப்பெடுப்பது மிகத் தந்திரமானதென்பதை எந்தச் சிறிய பாலகர்களும் அறிய முடியும்.
இங்கு எந்த நபர் கையெழுத்திட்டாலும்,அது குறித்த விவாதமாக இதை நகர்த்துவது விவேகமில்லை!
அதன் பின்னாலுள்ள அரசியலைக் குறித்தே விவாதித்து அம்பலப்படுத்தியாகவேண்டும்.
ஒவ்வொரு நபரும் தனத்து வர்க்கவுணர்வுக்கொப்பவே உலகக் கண்ணோட்டத்தை வளர்த்திருப்பார்.அதைத் தாண்டியவொரு பரந்துபட்ட மக்களது நலனை முன்தள்ளுவதென்பது வர்க்கச் சமுதாயத்தில் இயலாதகாரியம்.எனவே,இனவொடுக்குமுறை நிகழும் ஒரு நாட்டில்-திட்டமிட்டு இனப்படுகொலையைக் கட்டவிழ்த்துவிட்டவொரு நாட்டில், இத்தகைய பின்புலத்தை அடியோடு மறைத்துக்கவனத்தைத் திசை திருப்பும் இந்த அரசியலைக் கேள்விக்குட்படுத்துங்கள்.
வன்னியிலும்,தமிழர் தேசமெங்கும் இனவழிப்பைக் கட்டவிழ்த்துவிட்ட இலங்கை அரசானது, அனைத்து அழிவுவாத அரசியலுக்கும்(வடபுலத்திலிருந்து முஸ்லீம்கள் துரத்தப்பட்டதற்கும்) காரணமானது.இந்த இலங்கையினது அதிகாரத் திமிரைத் தனக்கேற்ற வகையில் பயன்படுத்த விரும்பிய இந்தியப் பிராந்திய நலனும்-மேற்குலக-அமெரிக்க நலன்களும் இலங்கை வாழ் இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளைத் தமக்கேற்பப் பயன்படுத்தி வருகின்றன.இதன் உச்சக்கட்டமே,இப்போது நிர்மலா தலைமையில் திசை திருப்பும் அரசியலாக மேலெழுகிறது.
தமிழ்பேசும் மக்களுக்கெதிராக நிகழ்ந்த வன்னிப்படுகொலைக்குத் தார்மீக பொறுப்பேற்க வேண்டிய இலங்கை அரசு,தமிழ்பேசும் மக்களிடம் மன்னிப்பும்,அவர்களது உரிமைக்கு உத்தரவாதமும்-பலகோடி நஷ்ட ஈடும் செலுத்தித் தமிழ்பேசும் மக்களுக்கு அரசியல் தீர்வை க் கொடுக்குவேண்டிய நிலையில்-அப்படித் தள்ளப்பட்டவொரு நிலையில்-அதை மறைத்துக் கவனத்தையும்,அரசியல் நகர்வையும் திசை திருப்பிச் சிறுபான்மை இனங்களைத் தமக்குள் அடிபட வைக்கும் இந்தப் பெரும்பான்மை இன நலன்சார்ந்த வியூகத்தை அறியாத புள்ளியைத்தாம், தனிநபர்களது கையெழுத்துப்பற்றிய உரையாடலில் நகர்த்திக் கொண்டிருக்கிறீர்கள். இதைவிட்டு மேலே செல்லுங்கள் கற்றறிந்தோரே!
அவர் கையெழுத்திட்டாலென்ன அல்லது இவர் கையெழுத்திட்டாலென்ன அதனூடாக நகர்த்தப்படும் அரசியல் நலன்கள் என்ன,அவை எந்த வர்க்கத்துக்குச் சார்பானது என்பதிலிருந்து,இனங்களுக்கிடையிலான முரண்பாட்டைக் கவனப்படுத்திக்கொள்வதுதாம் அவசியமாகிறது.இந்தியாவாலும்,உலக தேசங்களாலும்,பழிவாங்கப்பட்ட தமிழ்பேசும் மக்கள் சிங்கள இனவாத அரசால் இனப்படுகொலைக்குட்பட்டார்கள்.அந்தப் படுகொலைக்கு எதிரானவொரு அரசியலையும்,பாதிக்கப்பட்ட மக்களுக்கான நியாயத்தையும் வழங்க முடியாதவொரு சூழலில்,பாதிக்கபர்பட்ட மக்களிடமே சென்று அவர்களால் இஸ்லாமியர்கள் துரத்தப்பட்டார்கள்-அழிக்கப்பட்டார்கள் என்று வகுப்பெடுத்து,அவர்களாலேதாம் முஸ்லீம்கள் அரசியல் விழிப்புணர்வடைய வைக்கவேண்டுமென்பதும்,பின் தமிழர்களும்,இஸ்லாமியர்களும் சேர்ந்து இலங்கை அரசிடம் தமதுரிமைக்காகப் போராடுவதென்பதும் திட்டமிட்ட சதி.
அரசு என்ற மிகப்பெரிய அடக்குமுறைக் கருவியானது இங்கு தப்ப வைக்கப்பட்டுச் சிறுபான்மை இனங்கள் ஏமாற்றப்படுகிறார்கள். இலங்கை அரச ஆதிக்கமானது தமிழ்ப் பிரதேசமெங்கும் நிலைப்படுத்தப்படும்போது,தமிழ்பேசும் மக்களுக்குள் நிகழ்வது அதிகாரமென்பதா?
பூப்காவை அண்மித்துச் சிந்திப்பவர்களுக்கு இஃது:
பூப்காவை மீளக்கொணர்ந்தால், அதிகாரம் என்ற ஒன்றை விசாலமாக்க முடியாது.அல்லது, கறாராக விளங்கப்படுத்த முடியாதது.அது,நிலவாதது.அதிகாரம் என்ற ஒன்றில்லை!மாறாக, வித்தியாசமான வியூகத்துள்-மூலோபாயத்துள் தொடந்தியங்கும் அதிகாரத்துவ நிலைதாம் உண்டு.ஆக,பூப்காவின் கருத்துப்படி: "பொதுமையான அதிகாரமென்பது கிடையாது.அதிகாரத்துவ முறைமையும் இல்லை! அரச ஆதிக்கம்-அதிகாரமோ அன்றி அதன்வழியாகவியங்கும் நிறுவனப்பட்ட அதிகாரத்துவ மையமோ இல்லை. இதற்கெதிராக, பன்மைத்துவத்துக்குட்பட்ட பலப்பரீட்சையின் எல்லைக்குள் இயங்கும் மக்கள் கூட்டம்,இயக்கங்களே நிலவ முடியும்.
மீளவும்,இதை இலகுவாகச் சொடுக்குவோமானால்:"நிறுவனப்பட்ட அதிகாரம் என்பது இல்லை.அதிகாரம் என்பது ஒரு கட்டமைவும் இல்லை.அல்லது ஒரு சர்வ வல்லமைக்குட்பட்ட சர்வ வல்லமையாளனும் இல்லை. அதிகாரம் என்பதன் பெயர்,ஒரு சமுதாயத்துள்குழப்பமுடைய வியூகங்களாகவும்-சூழல்கள் ஆகவுமே அது இயங்குகிறது. இதற்குள்,எந்த அதிகாரத்தை எவர் கொண்டிருக்கிறார்? இது பூப்காவை அண்மித்தியங்குபவர்கள் பதில் சொல்லவேண்டும். தேநீர் பூக்கள்
தமிழ் சமூகம் தனக்கு தேவையான போதேல்லாம் முஸ்லிம் சமூகத்தின் முதுகில் குத்துகிறது 1915 ம் ஆண்டு நடந்த முஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள கலவரத்தில் பல முஸ்லிம் பெண்களின் கற்புகள் சூறையாடப்பட்டன. முஸ்லிம்களின் கடைகளும் வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டன. இந்த சிங்கள பேரினவாதிகளை சட்டத்தின் பிடியில் இருந்து காத்தவர்கள் தமிழ் மேலாதிக்க மனோபாவம் கொண்ட தமிழின தலைவராக இருந்த சேர் பொன்னம்பழம் இராமநாதன் தான். ஜூலை இன கலவரத்தில் முஸ்லிம்கள் பல தமிழர்களை உயிர் காத்தனர் ஆனால் 1985 தொடக்கம் பிரபாகரன் கொல்லபடும் வரை முஸ்லிம்களுக்கு எதிராக செயல்பட்டுகொண்டுதான் இருந்தனர் இதில் ஆயிர கணக்கான முஸ்லிம்கள் புலிகளினால் கொல்லபட்டனர் பல ஆயிரம் கோடி ரூபா கொல்லையிடப்பட்டது பல கோடி ரூபாக்கள் கப்பமாக பெரப்பட்டது இனியாவது தமிழர்கள் தமிழ் முஸ்லிம் உறவு பற்றி சுதந்திரமாக சிந்திக்க வேண்டும்