Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடந்த வெள்ளி இத்தாலிய கரையில் மூழ்கிய உல்லாசப்பயணிகள் கப்பலில் தேடப்படுவோர் தொகை திடீரென இன்று 29 ஆக உயர்ந்தது. இன்று ஐந்து இறந்த உடலங்கள் மீட்கப்பட்டன. அதேவேளை கப்பலில் உள்ள சிறிதும், பெரிதுமான அறைகளில் நீர் உட்புகாமல் இருந்தால் சிலர் இன்னமும் உயிருடன் இருக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

கப்பல் கவிழ்ந்த நான்கு மணி நேரத்தில் அதில் பயணித்த 4000 பேரை காப்பாற்றியதாக மீட்புப்பணியில் ஈடுபட்டவர்கள் கூறுகிறார்கள். மேலும் இன்று கப்பலின் கடைசி நேர தகவல்கள் அடங்கிய கறுப்புப் பெட்டி வெளியிடப்பட்டது. கப்பலின் தலைமை மாலுமி மீட்புப் பணிகள் மும்முரமாக நடைபெற யாதொரு பொறுப்பும் இல்லாமல் தலைதெறிக்க ஓடிவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பொதுவாக இப்படியான பெரிய கப்பல்களுக்கு கேப்டனாக இருப்பவர்கள் கப்பல் மூழ்கினால் அதனுடன் தமது வாழ்வையும் முடிப்பது மரபாகும். டைட்டானிக் கப்பல் மூழ்கியபோது தவறுக்கு பொறுப்பேற்று அதனுடன் சேர்ந்து அதன் தலைமை மாலுமி கடலில் மூழ்கினார். ஆனால் இந்தக் கப்பலின் தலைமை மாலுமியோ யாதொரு பொறுப்புமில்லாது நடந்துள்ளார்.

விபத்தில் மாட்டிய பயணிகளை மீட்க வேண்டுமென்ற எண்ணமும் இல்லாமல் ஓடத் தொடங்கியுள்ளார். இத்தகைய ஆற்றல் குன்றிய ஒருவரை எப்படி இவ்வளவு பெரிய கப்பலின் தலைமை மாலுமியாக நியமித்தார்கள் என்பது பலத்த ஆச்சரியமாக உள்ளது. நீ இப்போது என்ன செய்கிறாய்.. இந்த நேரத்தில் உனது கடமையை மறந்து எங்கே ஓடுகிறாய். பிள்ளைகள், முதியவர்கள் கப்பலில் சிக்குண்டுள்ளார்கள் அவர்கள் தொகை என்னவென்று மீட்புப்பணியாளர் அலறுவது கறுப்புப் பெட்டியில் பதிவாகியுள்ளது. உலகம் முழுவதும் உள்ள கப்பல்களின் தலைமை மாலுமிகளுக்கு கேப்டன் என்று வழங்கப்பட்ட பெயருக்கே களங்கம் ஏற்படக்கூடியவாறு இவர் நடந்துள்ளார்.

0 Responses to கப்பலை விட்டு தலை தெறிக்க ஓடிய தலைமை மாலுமி!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com