அநீதி இழைக்கப்பட்ட தமிழினத்திற்கு நீதி வேண்டி பெல்ஜியத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட நீதிக்கான நடைப்பயணம் இன்று 10வது நாளாகவும் பனிமழைக்கு மத்தியிலும் தொடர்கின்றது.
யேர்மன் எல்லைப் பகுதிக்குள் வருகை தந்த இவர்களை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவும் அங்குள்ள புலம்பெயர் தமிழ் உறவுகளும் உற்சாகமாக வரவேற்று தமது ஆதரவினை வழங்கினர்.
இன்று யேர்மன் நாட்டிற்குள் பிரவேசித்த இம் மூவரும் அந் நாட்டின் Saarbrücken நகர பிரதிநிதிகளைச் சந்தித்து தமது நீதிக்கான நடைப்பயணத்தின் காரணத்தை எடுத்துரைத்தனர். அதனைச் செவிமடித்த அவர்கள் இவர்களது பயணம் வெற்றி பெறுவதற்கு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டனர்.
பாரெங்கும் பரந்துள்ள தமிழர்களின் உணர்வலைகளில் தமீழிழ தாகம் உள்ளது என்பதை பொங்குதமிழாய் பொங்கியெழுந்து உலகெங்கும் பறை சாற்றிய தமிழினமே இன்னும் தமிழன் சுகந்திர தாகத்துடன் வீறுநடை போடுகிறான் இதை உலகிற்கு உணர்த்த மார்ச் 5ம் திகதி ஐநா முன்றலில் எம்மோடு திரண்டுவாருங்கள் என்று நடைப்பயணத்தை தொடர்கின்ற மூவரும் அன்புரிமையோடு உலகத்தமிழினத்தை அழைக்கின்றனர்.
புலத்திலும் தமிழன் ஒன்றுபட்டு பலத்துடன் உள்ளான். சர்வதேசத்திற்கு இடித்துரைப்போம். எழுச்சியுடன் பேரலயாய் திரண்டுவாருங்கள்.
10வது நாளான இன்று நீதிக்கான நடைப்பயணம் யேர்மன் நாட்டை வந்தடைந்தது
பதிந்தவர்:
Anonymous
15 February 2012



0 Responses to 10வது நாளான இன்று நீதிக்கான நடைப்பயணம் யேர்மன் நாட்டை வந்தடைந்தது