அமெரிக்காவின் மிக பிரபலமான பாப்கரும் நடிகையுமான விட்னி ஹாஸ்டன் 'Witney Houston', நேற்று திடீரென மரணமடைந்த செய்தி மேற்கத்தேய இசை உலகை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸில் கிரம்மி விருதுகள் வழங்கும் விழா நடைபெறவிருந்த நிலையில் அதற்கு முதல் நாளான நேற்று, பெவெர்லி ஹில்டன் விடுதியில் தங்கியிருந்த ஹாஸ்டன், அங்கு மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
அவரது சடலம் குளியறையிலிருந்து மீட்க்பட்டதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இறக்கும் போது அவருக்கு வயது 48.
ஆறு கிராமி விருதுகள் வென்றவர், அவற்றில் மூன்று சிறந்த Pop Vocal Performance க்காக அவருக்கு கிடைக்கப்பெற்றது. 30 பில்போர்ட் விருதுகள், 22 அமெரிக்கன் மியூசிக் அவார்ட் விருதுகளுக்கும் விட்னி ஹாஸ்டனின் தனித்திறமைக்காக தேடி வந்தவை.
உலகின் மிக அதிகமான கலை விருதுகளை பெற்ற பெண்மணி எனும் கின்னஸ் சாதனைக்கும் விட்னி ஹாஸ்டனே சொந்தக்காரரும் இவரே. அவருடைய 'I Will Always Love You' இசை ஆல்பம் இன்றுவரை விற்றுக்கொண்டிருக்கிறது. இத்தனை புகழுக்கும் சொந்தக்காரராக இருந்தும் அண்மைக்காலமாக போதை வஸ்துக்கு கடுமையாக அடிமையாகியிருந்தார். இதனால் திருமண உறவிலும் விரிசல் ஏற்பட்டு விவாகரத்து பெற்றார்.
தற்போது அவருடைய மரணத்திற்கும், தீவிர குடிப்பழக்கம் மற்றும் போதை வஸ்து பழக்கம் என்பனவே காரணமாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. எப்படி இருந்த போதும், விட்ஸனின் மரணத்திற்கு ரிஹானா, டொல்லி பார்டொன், ராப் மோகுல் உட்பட பலர் தமது அதிர்ச்சியையும், இரங்கலையும் தெரிவித்துள்ளனர்.
பாப் பாடகர் மைக்கேல் ஜேக்சன் போன்று, இவருடைய மரணமும் பாப் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய கிராமி விருதுகள் வழங்கும் விழா இவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வாகவே தொடங்கப்படும் என பலரும் எதிர்பார்க்கிறார்கள்.
விட்னி ஹாஸ்டன்- மைக்கேல் ஜேக்சனை போன்று உலகை உலுக்கியுள்ள இன்னுமொரு மரணம்
பதிந்தவர்:
ஈழப்பிரியா
12 February 2012



0 Responses to விட்னி ஹாஸ்டன்- மைக்கேல் ஜேக்சனை போன்று உலகை உலுக்கியுள்ள இன்னுமொரு மரணம்