தனது குழந்தைகளும், பேரக் குழந்தைகளும் மேற்கத்திய பல்கலைகழகங்களில் கல்வி கற்று, மிக அமைதியான வாழ்க்கை வாழ ஒசாமா பின்லேடன் விரும்பியுள்ளார்.
இத்தகவலை உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதுபற்றி ஒசாமாவின் 5வது மனைவியின் சகோதரி ஒருவர் அளித்த பேட்டியில், ஒசாமா தனது குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளை அமெரிக்காவுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்று நல்ல கல்வி கற்க கூறினார்.
மேலும் அவர், தனது குழந்தைகளிடம் நீங்கள் அமைதியாக வாழ வேண்டும். நான் என்ன செய்தேனோ மற்றும் செய்து கொண்டிருக்கின்றேனோ அதனை நீங்கள் செய்ய வேண்டாம் என கூறியதாக லண்டன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.



0 Responses to வன்முறை செயல்களில் ஈடுபட வேண்டாம்: ஒசாமா பின்லேடன் அறிவுரை