ஐ.நா மனித உரிமைச் சபையை நோக்கிய லண்டன் இருந்து ஜெனீவா நோக்கிய நடைப்பயணம் 20வது நாளாக உறுதியுடன் தொடர்ந்து வருகின்றது.
கடந்த ஜனவரி 28ஆம் நாள் லண்டனில் இருந்து தொடங்கிய இந்த நடைப்பயணம், ஐ.நா மனித உரிமைச் சபை தொடங்குகின்ற பெப்பரவரி 27ம் நாளில் ஜெனீவா ஐ.நா மனித உரிமைச் திடலை சென்றடையவுள்ளது.
இந்நாளில் நீதிக்காய் ஒன்றுபடுவோம் எனும் மாபெரும் மக்கள் எழுச்சி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழர் மீதான சிறலங்கா அரசினது இனப்படுகொலை குறித்தான சுயாதீனா சர்வதேச விசாரணை , தமிழீத்தில மனித உரிமைகளைக் கண்காணிப்பகத்தை ஐ.நா நிறுவவேண்டும், தமிழீழத்தில் பொதுவாக்கெடுப்பொன்று நடத்தப்படவேண்டும் ஆகிய கோரிக்கைகளை இந்த நடைப்பயணம் வலியுறுத்துகின்றது.



0 Responses to தமிழர்களுக்கான நீதியை நிலைநாட்டுவோம்!