Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜெர்மன் வெளிநாட்டமைச்சுக்கு முன்னால் சிறிலங்காவில் சர்வதேச சுயாதீன விசாரணை வலியுறுத்தும் மக்கள் போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஐ.நா நிபுணர் குழு அறிக்கை பரிந்துரைத்தவாறு சிறிலங்காவில் சர்வதேச சுயாதீன விசாரணைப் பொறிமொறி ஒன்றினை வலியுறுத்தும் தீர்மானத்தை ஐ.நா மனித உரிமைச் சபையில் கொண்டு வருவதற்கு ஜெர்மனிய அரசாங்கம் வலியுறுத்தும் வகையிலேயே இந்த மக்கள் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் 20ஆம் திகதி ஜெர்மனிய வெளிநாட்டமைச்சுக்கு முன்னால் AUSWAERTIGES AMT, WERDERSCHER MARKT, 110117 BERLIN, மதியம் 2மணி முதல் 5.00மணி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த அமைதிவழி மக்கள் போராட்டத்தில் ஜெர்மன் வாழ் தமிழ் மக்கiயும் தமிழர் அமைப்புக்களையும் பங்கெடுத்து ஈழவிடுதலைப் போராட்டத்துக்கு வலுவூட்டுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்க ஜெர்மன் மக்கள் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலதிக விபரங்களுக்கு 0178 336 0910 / 0178 713 6202 தொலைபேசி இலக்கங்கள் ஊடாக அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to ஜெர்மனியில் சர்வதேச சுயாதீன விசாரணையை வலியுறுத்தும் மக்கள் போராட்டம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com