Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

லண்டனில் இருந்து ஜெனீவா நோக்கிய நீதிக்கும் சமாதானத்துக்குமான நடை பயணம், பிரான்ஸ் தலைநகர் பாரிசில் தடம்பதித்துள்ளது.

அனைத்துலக விசாரணைக்குரிய ஆண்டாக செயற்படுத்துவோம், மக்கள் போராட்டங்களை வலுப்படுத்துவோம் எனும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தீர்மானத்தினை முழக்கமாக கொண்டு, கடந்த சனவரி 28ஆம் திகதி லண்டனில் இருந்து தொடங்கிய இந்த நடைப்பயணம், பெப்பரவரி 27ம் நாள் ஜெனீவா ஐ.நா மனித உரிமைச் திடலை சென்றடையவுள்ளது.

தமிழர் மீதான சிறலங்கா அரசினது இனப் படுகொலை குறித்தான சுயாதீனா சர்வதேச விசாரணை, தமிழீத்தில மனித உரிமைகளைக் கண்காணிப்பகத்தை ஐ.நா நிறுவவேண்டும், தமிழீழத்தில் பொது வாக்கெடுப்பொன்று நடத்தப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை இந்த நடைப்பயணம் வலியுறுத்துகின்றது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரான்ஸ் மக்கள் பிரதிநிதிகளின் வழிகாட்டுதலுடன், பிரான்ஸ் தமிழர் நடுவத்தின் ஒத்துழைப்புடன் பிரான்சுக்குள் காலடி வைத்துள்ள, இந்த நடை பயணம் தலைநகர் பாரிசில் பல்வேறு சந்திப்புகளை மேற்கொண்டிருந்தது.

முள்ளிவாய்க்கால் நினைவுக்கல் உள்ள செவ்விறோன் பகுதிக்கு சென்ற நடைபயணிகள், செவ்றோன் நகரபிதா ஸ்ரீவன் கத்தினியோன் அவர்களைச் சந்தித்து கோரிக்கை மனுவினைக் கையளித்ததோடு, முள்ளிவாய்க்கால் நினைவுக்கல்லுக்கு வணக்கம் செலுத்தினர்.

தொடர்ந்து, பிரிகேடியர் சுப.தமிழ்செல்வனின் சிலைக்கு வணக்கம் செலுத்தும் முகமாக லா கூர்னெவ் பகுதிக்குச் சென்றனர்.

லா கூர்னெவ் நகரசபை உறுப்பினர் அந்தோனி றூசல் அவர்களை சந்தித்து, கோரிக்கைகளை முன்வைத்த நடைப்பயணிகள், பிரிகேடியர் சுப.தமிழ்செல்வனின் சிலைக்கு வணக்கம் செலுத்தினர்.

தொடர்ந்து, தமிழர் வர்த்தக நிலையங்களின் பிரதான மையமாகவுள்ள லா சப்பல் பகுதிக்குச் சென்ற நடைப்பயணிகளை, வர்த்தகர்கள் இன்முகத்துடன் வரவேற்றுக் கொண்டனர்.

இங்கு வர்த்தக பெருந்தகைகளைச் சந்தித்து உரையாடியிருந்ததோடு, தொடர்ச்சியான அவர்களது ஆதரவுக்கு நன்றியினையும் தெரிவித்தனர்.

இதேவேளை, நீதிக்கும் சமாதானத்துக்குமான நடைபயணிகளுக்கான சிறப்பு வரவேற்பு சந்திப்பொன்றினை தமிழர் நடுவம், தனது அலுவலகத்தில் ஏற்பாடு செய்திருந்தது.

இங்கு விடுதலைச் செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பினை நடைபயணக்குழுவினர் மேற்கொண்டிருந்தனர்.

குறிப்பாக, பிரான்சின் ஆளும் கட்சியாக யூஎம்பி கட்சியின், தேசிய ஆலோசகர்களாக உள்ள, பாரிஸ் 18ம் வட்டார பிரதிநிதிகள் தோமாஸ் மற்றும் அபேஜா ஆகியோரையும் , நடைபயணிகள் சந்தித்திருந்தனர்.

ஈழவிடுதலைப் போராட்டத்தின் நியாயப்பாடுகளை முன்னிறுத்தியவாறு பயணிக்கும், நீதிக்கும் சாமாதானத்துக்குமான நடைபயணம் குறித்து, ஐரோப்பா ,அவுஸ்ரேலியாக, அமெரிக்கா ஆகிய கண்டங்களை தளமாக கொண்டுள்ள தமிழ் ஊடகங்கள் பலவும் தொடர்ச்சியாக ஒலிபரப்பு செய்து வருவதோடு, தமிழ் இணையத்தளங்கள் பலவும் ஒத்துழைப்பினை வழங்கி வருகின்றன.

நிறைவாக, தமிழர் தாயக மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில், யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் யாழ் உதயன் நாளேடு, தனது முதன்மைச் செய்தியாக, இந்த நடைபயணத்தினை தாங்கி வந்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.





0 Responses to பாரிசில் தடம்பதித்துள்ள நீதிக்கும் சாமாதானத்துக்குமான நடைபயணம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com