விருதுநகர் மாவட்ட தே.மு.தி.க. பொருளாளர் சங்கரலிங்கத்தின் இல்ல திருமண விழா இன்று அருப்புக்கோட்டையில் நடந்தது. இதில் தே.மு.தி.க. நிறுவனரும், எதிர்கட்சி தலைவருமான விஜயகாந்த் கலந்து கொண்டு பேசியதாவது:
இடைத்தேர்தலுக்கு 26 மந்திரிகள் உள்பட 34 பேர் கொண்ட குழு அதிமுக அமைத்திருக்கிறது. ஆனால், தானே புயல் பாதிக்கப்பட்ட பகுதிக்கு 26 மந்திரி உள்பட 34 பேர் கொண்ட குழுவை அனுப்பினீர்களா? எங்க மக்களை ஏமாற்ற பார்க்கிறீர்கள். சங்கரன் கோவிலில் மிக்சி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவற்றை கொடுக்கிறார்கள். ஆனால் மின்சாரம் இல்லாமல் இதையெல்லாம் எப்படி பயன்படுத்த முடியும். இதனால் மக்கள் அதிருப்திபயாக உள்ளனர். நலத் திட்டங்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவை பொது மக்களுக்கு சேருவதை நான் தடுக்க மாட்டேன்.
சங்கரன் கோயில் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னால், வேட்பாளரை அறிவித்துவிட்டு குழுக்களை அமைத்து ஓட்டுக்ககு இலவசங்களை கொடுத்து வருகிறார்கள். இது உங்களுக்கு (அதிமுக) இடைத்தேர்தலில் தோல்வி பயம் உள்ளது என்பதை இப்போது தெரிந்துவிட்டது. என் மீது பொய் வழக்கு போட வேண்டும் என்று எண்ணுகிறார்கள். எதற்கும் நான் பயப்பட போவதில்லை. என்னை பொய் வழக்குப் போட்டு மிரட்டிப் பார்க்காதீர்கள். இன்னும் நிறைய பேசுவேன். வேறு மாதிரி பேசுவேன் என்றார்.



0 Responses to அதிமுகவுக்கு இடைத்தேர்தல் பயம்! விளாசித் தள்ளிய விஜயகாந்த்!!