Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரித்தானிய செய்திச் சேவையான (பி.பி.சி) உடன் தொடர்புகளைப் பேணிய ஊடகவியலாளர்கள் சிலர் ஈரானில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் எத்தனை பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்பது தொடர்பில் தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

பி.பி.சி. இன் பார்ஷிய மொழிச் சேவைக்கு செய்திகளை வழங்கியமை, ஈரானியர்கள் சிலருக்கு ஊடகப் பயிற்சியளிக்க அந்நிறுவனத்திற்கு உதவியாக இருந்தமை போன்ற சில காரணங்களுக்காகவே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் ஈரானில் செயற்பட்டுவருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் பி.பி.சி. ஊழியர்கள் எவரும் ஈரானில் இல்லையென அதன் தலைமைப்பீடம் அறிவித்துள்ளது.

பி.பி.சி. பிரித்தானிய உளவுச் சேவைக்கு உதவி புரிவதாக ஈரான் கடந்த சில காலங்களாகக் குற்றஞ்சாட்டி வருகின்றது.

இதேவேளை தனது பார்ஷிய மொழிச் சேவையின் ஊழியர்களை ஈரான் பல்வேறு வழிமுறைகளைக் கையாண்டு அடக்க முயல்வதாக பி.பி.சி. தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

0 Responses to பி.பி.சி.யுடன் தொடர்புடைய ஊடகவியலாளர்கள் ஈரானில் கைது

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com