Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நேற்று முன்தினம் மரணமடைந்த அமெரிக்கப் பாடகி வித்னி ஹவுஸ்ரன் எப்படி மரணமடைந்தார் என்பதை வைத்தியத் துறையினர் சரிவர வெளிவைக்க முடியாது தள்ளாடுவதாக லொஸ் ஏஞ்சல் செய்திகள் தெரிவிக்கின்றன. இவருடைய பிரேத பரிசோதனைகள் முடிவடைந்த பின்னர் பத்திரிகையாளரை சந்தித்த வைத்தியர்கள் மரணத்திற்கான திட்டவட்டமான காரணத்தைக் கூறவில்லை.

ஆனால் இவர் சனக்ஸ் என்ற போதை வஸ்த்தை மதுபானத்துடன் கலந்து குடித்திருக்கலாம் என்று இவர் தொடர்பான செய்திகளை வெளியிடும் இணையத்தளம் அறிவிக்கிறது. சனக்ஸ் என்ற போதைவஸ்த்து உடலில் உள்ள நீர்த்தன்மையை முற்றாக உவிந்து ஆவியாக்கிவிடும். பிரேத பரிசோதனையில் இவருடைய சுவாசப்பைகள் நீர்த்தன்மையற்று வரண்டு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

வித்னி ஹவுஸ்ரன் லொஸ் ஏஞ்சலில் உள்ள கில்ரன் கோட்டலின் நான்காவது மாடியில் உள்ள குளியலறை தொட்டியில் இறந்தபடி காணப்பட்டார். இவர் அளவுக்கு அதிகமான போதை காரணமாக, அல்லது அளவு கூடிய மருந்து டோஸ் காரணமாக தண்ணீர் தொட்டியிலேயே மூழ்கி இறந்திருக்கலாம் என்றும் சந்தேககிக்கப்படுகிறது.

இதற்கிடையில் கிரமி விருது வழங்கும் நிகழ்வில் வித்னி ஹவுஸ்ரனுக்கு நேற்று விசேட அஞ்சலி செலுத்தப்பட்டது. இவர் பாடிய புகழ் மிக்க பாடல் அரங்கில் ஒளிக்கவிடப்பட்டது. அனைவரும் கண்ணீர் மல்க அந்தக் காட்சியை பார்த்து எழுந்து நின்று கைகளை தட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

இவருடைய மரணத்தைத் தொடர்ந்து இவர் பாடிய பாடல்கள் அடங்கிய இசை ஆல்பங்கள் அதி வேகமாக விற்பனையாக ஆரம்பித்துள்ளன. மேலும் இவருடைய பாடல்களை பல புதிய இளம் ரசிகர்கள் தூசுதட்ட ஆரம்பித்துள்ளார்கள். இன்று அதிகாலையில் இருந்து புதிதாக விற்பனை சூடுபிடித்துள்ளது.

0 Responses to பாடகி வித்னி ஹவுஸ்ரன் மரணித்தது எப்படி..?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com