Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கைத் தீவில் தமிழர் உரிமை பறிக்கப்பட்ட நாளான நேற்று லண்டனில் கடுமையான காலநிலைக்குள்ளும் தமிழர்கள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினையும், துண்டுப்பிரசுர விநியோகமும் செய்தனர்.

நேற்று மதியம் 1:00 மணிமுதல் மாலை 3:00 மணிவரை Oxford Circus, Oxford Street, Tottenham Court Road, Piccadilly Circus, ஆகிய பகுதிகளில் உள்ள நிலக்கீழ் தொடரூந்து நிலையங்களுக்கு முன்பாகவும், வீதிகளிலும் நின்று இலங்கைத் தீவில் நடைபெறும் தமிழின அழிப்பு, மற்ரும் மனித உரிமை மீறல்கள் போன்ர விடையங்கை எடுத்து விளக்கும் துண்டுப்பிரசுரங்களை வழங்கினர்.

அத்தோடு மாலை 4:00 மணி முதல் மாலை 7:00 மணி வரை பிரித்தானியப் பிரதமர் இல்லம் முன்பாக அமைந்திருக்கும் Downing Street பகுதியிலும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.

இதில் நேற்று பிரித்தானியாவில் நிலவிய கடும் குளிரையும் பொருட்படுத்தாது நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டிருந்ததோடு பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டியங்கும் தமிழ் அமைப்புக்களான பிரித்தானியத் தமிழர் பேரவை, பிரித்தானிய இளையோர் அமைப்பு, பிரித்தானியத் தமிழ்ர் ஒன்றியம், பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஆகிய அமைப்புக்களைச் சேர்ந்த பிரதிநிதிகளும் ஒன்றாக கலந்து இப் போராட்டத்தில் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




















0 Responses to லண்டனில் நடைபெற்ற கவனயீர்ப்பும் துண்டுப்பிரசுரமும் போராட்டமும் (படங்கள், காணொளி இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com