Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கூடங்குளம் அணு உலை ஆபத்தா? அவசியத்தேவையா? இன்றைய தமிழகத்தின் முக்கிய கேள்விகள் இவை.

தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறவும், தி.மு.க.வின் படுதோல்விக்கும் பல காரணங்கள் இருக்கலாம், மிக முக்கிய காரணம் மின்வெட்டு. தி.மு.க. ஆட்சி காலத்தில் 2 ,3 மணிநேரங்களாக இருந்த மின்வெட்டு தற்போது 8 மணி நேரமாக அதிகரித்திருக்கிறது.ஆட்சிக்கு வந்த ஆறுமாதத்தில் சரிசெய்யப்படும் என்றார் ஜெயலலிதா,பின்பு 2012 அகஸ்ட்டுக்குள் சரிசெய்யப்படும் என்றார்,தற்போது டிசம்பர் மாதத்திற்குள் படிப்படியாக சரியாகும் என்கிறார். பல தொழிற்சாலைகள் முடங்கிக்கிடக்கின்றன,பலர் வேலை இழந்து தவிக்கின்றனர்.தமிழகத்தில் மின்வெட்டு நிரந்தரமாகி விடுமா? என்ற நிலை உருவாகியுள்ளது.இந்த நிகழ்வு மாநில மற்றும் மத்திய அரசுகளின் நீண்டகால மெத்தனப்போக்கால் ஏற்பட்டது.இந்த சூழ்நிலையில் தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களின் மின் தேவைக்காக உருவாக்கப்பட்ட கூடங்குளம் அணு உலை மிகப்பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

தமிழகத்தில் இந்திஎதிர்ப்பு, இலங்கை தமிழர் போராட்டங்களுக்கு பிறகு மக்களின் தன்னெழுச்சியான போராட்டமாக கூடங்களும் அணு உலை எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கூடங்குளம் தற்போது அரசியல் போராட்டம் என்கிற தன்மையைத் தாண்டி, இந்து மற்றும் கிறுஸ்துவ அமைகளுக்கிடையிலான பிரச்சனையாகவும்,ரஸ்யாவுக்கு எதிரான அமெரிக்க சதியாகவும் பார்க்கப்படுகிறது. நேரடியாக தலையிட்டு தீர்வு காணவேண்டிய மத்திய அரசு வழக்கம் போல ஒரு நிபுணர்குழுவை அமைத்துவிட்டு, வாய்முடி மவுனம் சாதிக்கிறது. தமிழக முதல்வர் ஜெயலலிதாவோ கூடங்குளம் பகுதி மக்களின் முழுநம்பிக்கையை பெற்ற பின்பே அணு உலையை தொடங்கவேண்டும் என்பதோடு நிறுத்கிக்கொண்டார்.

மேலும் இந்த எதிர்ப்பு போராட்டம் கூடங்குளம் மட்டுமல்ல, அணு உலைகளே வேண்டாம் என்கிற நிலைக்கு சென்றுகொண்டிருக்கிறது.

அணு உலை எதிப்பாளர்கள் முன்வைக்கும் காரணங்கள்

1. 1980களில் இந்தியாவின் கனவான ஒரு அணுநீர்முழ்க் கப்பலை தயாரிக்கும் முயற்சிகள் தோல்வி கண்டது. அதற்கு உதவி செய்ய முன்வந்த ரஸ்யா அணு நீர்முழ்கிக்கான தொழில் நுட்பத்தை வழங்க முன்வந்தது,அத்துடன் ஒரு நிபந்தனையும் விதித்தது.இந்தியா, ரஸ்யாவிடம் அணு உலைகளை வாங்க வேண்டும் என்பது தான் அது.26 ஏப்ரல்,1986ல் சொர்நோபிலில் வெடித்த அணுஉலைகளை பெயர் மாற்றி விற்ற போது எந்த மறுப்பும் தெரிவிக்காமல் ராஜ¦வ்காந்தி ,நவம்பர் 20,1988 ல் ஒப்பந்தங்களில் கையொழுத்திட்டார்.

2. கூடங்குளம் அணு உலை ரஸ்யாவில் விபத்து நிகழ்ந்த சொர்னோபில் அணு உலை வகையைச் சேர்ந்தது பாதுகாப்பற்றது.மேலும் சமீபத்தில் ஃபுகுஷிமாவில் விபத்து நடந்தவுடன் ரஸ்யாவில் உள்ள அணுஉலைகளை ஆராய ஒரு குழு அமைத்தத்தார் ரஸ்யா ஜனாதிபதி திமித்திரிமெத்வதேவ். அந்த குழு ஃபுகுஷிமா அளவு விபத்துகளை தாக்குபிடிக்கும் தன்மை எந்த ரஸ்ய அணு உலைக்கும் இல்லை என்றது. மேலும் மிக ஆபத்தான 31 பிரச்சனைகள் இருப்பதாக ரஸ்ய ஆய்வு தெரிவிக்கிறது.

3. முதலில் கேரளாவில் அமைப்பது என்று முடிவு செய்தது அரசு. அங்கு எல்லாகட்சிகளும் இணைந்து நடத்திய போராட்டத்தால், அந்த மாநிலத்திலிருந்து தமிழகத்தின் தென்கோடியிலிருந்த கூடங்குளத்திற்கு மாற்றினார்கள்.இந்த இடம் தேர்வு செய்தது முதல் பிரச்சனைகள் தொடங்கின. ரஸ்ய பொறியாளர்கள் குறித்து வைத்திருந்த இடத்தை இந்திய பொறியாளர்கள் மாற்றினார்கள். இந்த இடம் மாற்றம் காரணமாக ரஸ்யா,மற்றும் இந்திய விஞ்ஞானிகளிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது.

4. கூடங்குளத்தில் அமைய உள்ள வி.வி.இ.ஆர் அணு உலைகளில் அதன் கண்ரோல்ராடு,அவசரகால மின்சார சேமிப்பு, பாதுகாப்பு அமைப்புகளில் பல பிரச்சனைகளும் நம்பகதன்மையும் இ¢ல்லை என்கிறார்கள்.

5. அணு உலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் கடலில் கலக்கும் போது மீன் வளம் பாதிக்கப்படும்.

6. கூடங்குளம் அணு உலைக்கு ''இஐஏ'' ஆங்கிகாரம் கிடையாது.அணுசக்தி துறையின் சரத்துகளின்படி முறையாக மக்களிடம் கருத்து கேட்பு நடத்தப்படவில்லை.சூற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிக்கை பெறப்படவில்லை,

7. கேரள பல்கலைகழகத்தின் நிலஇயல்துறை, சென்னை ஐ.ஐ.டியின் ஆய்வுகளின் படி 2004 நவம்பரில் வெளிவந்த ''கரண்ட சயின்ஸ்'' இதழில் கூடங்குளம் அணுஉலை அமைந்துள்ள இடம் எரிமலைகுழம்புகளால் உருவானது என்கிறார்கள். அணு உலை அமைந்துள்ள உருகிய எரிமலை பாறைப்பிதுங்கல்கள் நேரிடியாக அணு உலையின் ஸ்திரதன்மையை குலைத்திடும் என்கிறார்கள்.

8. கூடங்குளத்தில் அமைக்கப்படும் வி.வி.இ.ஆர்.1000 அணு உலை இது வரை கடற்கரையில் அமைக்கப்பட்டதில்லை,ரஸ்யா பொறியாளர்களுக்கு இதில் அனுபவம் இல்லை.மேலும் வி.வி.இ.ஆர்.1000 அணு உலைகளின் குளிர்விக்கும் கலன்கள் முதன்முறையாகக் கடல் நிரைப்பயன்படுத்தவிருக்கின்றன.

9. மேலும் உலையிலிருந்து 1.6 கீமி பகுதியில் 35,000 பேர் வசிக்கிறார்கள். 5 கிமீ பகுதியில் லட்சம் பேர் வசிக்கிறார்கள்.எந்தவிதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் நடத்தப்படாமலையே உலையில் டம்பி எரிபொருள் ஏற்றி சோதனை செய்யப்பட்ட அன்று வெளிபட்ட பெரும் ஒசை வெளிப்பட்டதால் அங்கிருந்த மக்கள் உறங்கமுடியவில்லை.

10. இந்தியாவை பொறுத்தவரை மின்சார தேவைகளில் சில கோடிகள் செலவில் செயல்படும், சூரியஒளி,காற்றாலை அனல் மின்சாரம் போன்றவற்றின் மூலமாக 11.05 சதம் மின்சாரம் கிடைக்கிறது.ஆனால் பல ஆயிரம் கோடிகளில் செயல்படும் அணுஉலைகள் மூலமாக 2.36 சதம் மின்சாரம் மட்டுமே கிடைக்கிறது.

சிலர் நினைப்பது போல கூடங்களும் அணு உலைக்கு எதிரான போராட்டம் என்பது சிலமாதங்களுக்கு முன்பு துவங்கப்பட்டதல்ல. கடந்த 25 ஆண்டுகளாக இந்திய நாடாளுமன்றத்திலும், வெளியேயும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.இந்த பிர்ச்சனையில் காங்கிரஸ், பாஜக போன்ற கட்சிகள் அணு உலை ஆதரவு போராட்டங்களை நடத்தி கொண்டிருக்கின்றன. கூடங்குளத்தில் எதிப்பு போராட்டங்களும் உச்சத்தை தொட்டிருக்கும் நிலையில் வரும் மாதங்களில் கூடங்களும் அணு உலை செயல்பட தொடங்கும் தகவல் வெளியாகிக்கொண்டிருக்கினறன.இந்தியாவின் மின்சார தேவையும்,அணு ஆபத்தும், அரசுகளின் மெத்தமும் பிரச்சையை மேலும் சிக்கலாக்கி வருகிறது.கூடங்குளம் பிரச்சனையின் தீர்வு கீழ் வரும் கேள்வியின் விடையிலேயே அடங்கியுள்ளது.

அணு உலை ஆதரவாளர்களிடமிருந்து கேட்கபடும் கேள்வி:

இத்தனை கோடி செலவு செய்து கட்டியபிறகு முடச் சொல்வது நியாயமா? பணம் வீணாகிறேதே?

கூடங்குளம் வாழ் பெண்களின் பதில்:

உங்க மகளுக்கு திருமணம் நிச்சயம் செய்து எல்லா செயவும் பண்ணி நாளைக்கு காலை கல்யாணம்.பையனுக்கு எய்ட்ஸ் இருக்குன்னு முந்தின ராத்திரி தெரிய வந்தா.அடுத்த நாள் காலையில கல்யாணம் செய்வீங்களா?,இத்தனை செலவு பண்ணிட்டோம்.கல்யாணம் நடக்கட்டும்னு விடுவீங்களா?

இந்த கேள்விக்கு என்ன பதில் ...... ? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்..!

தமிழ்மீடியா
அ.தமிழ்ச்செல்வன்.

2 Responses to மாப்பிளைக்கு எய்ஸ்ட்சுன்னு தெரிஞ்சா பொண்ணுக்கு கல்யாணம் கட்டுவீகளா..?: கூடங்குளம் கேள்வி

  1. நண்பருக்கு வணக்கம் ....

    உங்களின் கேள்வி ... ரசனையாக உள்ளது . ஆனால் அந்த கேள்வியை கொஞ்சம் ஆராய்ந்து பாருங்கள் ...

    மாப்பிளைக்கு AIDS என்று யார் சொன்னாலும் , கல்யாணத்தை நிறுத்தி விட முடியுமா ...? AIDS என்றால் என்னவென்று தெரியாதவர்கள் சொன்னாலும் கல்யாணத்தை நிறுத்தி விட முடியுமா ...?. மருத்துவர் சொன்னால் மாத்திரமே , அதுவும் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு சொன்னால் மாத்திரமே நிறுத்த முடியும் ....இல்லையா ....?

    இங்கு அணுமின் நிலையங்கள் ஆபத்தானது என்று திரு. உதயகுமார் ( அரசியல் அறிவியலில் டாக்டர் ) சொல்லுகிறார் . அவரின் ரிப்போர்ட் எப்படி சரியாகும் ...? ஆனால் அதே நேரத்தில் முறையான மருத்துவர்கள் ( அறிவியல் அறிஞர்கள் ) மாப்பிளைக்கு ( அணுமின் நிலையத்திற்கு ) AIDS ( ஆபத்து ) இல்லை என்று மருத்துவ பரிசோதனைக்கு ( ஆய்வுகளுக்கு ) பிறகு சொல்லி இருக்கிறார்கள் . இப்பொழுது சொல்லுங்கள் கல்யாணத்தை நிறுத்துவது முட்டாள் தனம் அல்லவா ...?

     
  2. நண்பர் இருதயம் அவர்களுக்கு,
    முறையான மருத்துவர்கள் அனைவரும் மாப்பிள்ளை வீட்டை சேர்ந்தவர்களாக இருக்கும் பொழுது மருத்துவ பரிசோதனை எப்படி நம்பகத்தன்மை மற்றும் சரியனனதாக இருக்க முடியும்?.இதை நண்பர் யோசித்து பார்க்க வேண்டும்.

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com