Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்திய பாராளுமன்றத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சி சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் சமீபத்தில் தனது உரையின் போது அனைவரும் பாராட்டும் வண்ணம் ஒரு குட்டிக் கதையைக் கூறி அதன் மூலம் பிரதமர் மன் மோகன் சிங்கைப் பாராட்டினார்.

கதை இது தான்.

ஒரு தந்தை தனது மூன்று மகன்களையும் அழைத்து ஆளுக்கு 100 ரூபாய் பணம் கொடுத்து நீங்கள் இதன் மூலம் என்ன பொருள் வேண்டுமானாலும் வாங்க முடியும். ஆனால் நீங்கள் வாங்கும் பொருட்களைக் கொண்டு நமது வீட்டிலுள்ள அறையை முற்று முழுதுமாக நிரப்ப வேண்டும் என நிபந்தனை விதித்தார்.

முதலாவது மகன் தனது முழுப் பணத்தையும் செலவழித்து வைக்கோல் வாங்கினான். ஆனால் அறையை முழுதும் நிரப்ப முடியவில்லை. இரண்டாவது மகனோ முழுப் பணத்தையும் செலவழித்து பருத்தி துணி வாங்கினான். ஆனால் அவனாலும் முழு அறையையும் நிரப்ப முடியவில்லை.

ஆனால் மூன்றாவது மகனோ புத்திசாலித் தனமாக வெறும் ஒரு ரூபாய் மட்டுமே செலவழித்து ஒரு மெழுகு திரியை வேண்டி பற்ற வைத்தான். அறை முழுதும் இடைவெளியின்றி வெளிச்சத்தால் நிரம்பியது. தனது தந்தை வைத்த போட்டியில் அவன் வெற்றி பெற்றான்.

இக்கதையைக் கூறி முடித்த பின் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் கூறியதாவது, 'நமது பிரதமர் மன்மோகன் சிங் அந்த மூன்றாவது மகனைப் போன்றவர். அவர் பதவியேற்ற காலத்திலிருந்து எமது நாடு அறிவு ஒளியாலும் புகழாலும் நிரம்பிக் காணப்படுகின்றது' என்றார்.

இவர் இக்கதையைக் கூறி முடித்தவுடன் பின் மேசையிலிருந்து ஒரு குரல் ' எங்கே அந்த மிச்சப் பணம் 99 ரூபாயும்?' என ஒலித்தது. நாடாளுமன்றம் அந்தக் கணம் திகைத்தது.

உரைகளின் போது குட்டிக்கதை சொல்றவங்க எல்லாம் கொஞ்சம் கவனமாக இருந்துங்க..

0 Responses to பிரதமரிடம் இருந்த மிகுதிப் பணம் 99 ரூபாய் எங்கே?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com