மேற்கு நேபாளில் உள்ள போக்ஹரா நகரில் இன்று வியாழக் கிழமை இந்தியா மற்றும் நேபாள் ஆகிய நாடுகள் தமக்கிடையே பிராந்திய பாதுகாப்புக் குறித்து இருதரப்பு கூட்டத்தை ஆரம்பித்தன.
நான்கு நாட்கள் நீடிக்கும் இந்த பேச்சுவார்த்தையில் பாதுகாப்புக் குறித்தே அதிக கவனம் செலுத்தப்படவுள்ளது. இப் பேச்சுவார்த்தையின் போது நேபாளின் குழு சார்பாக அதன் வெளிநாட்டு அமைச்சின் இணைச் செயலாளர் தீபக் திடால் தலைமை வகிக்கிறார்.
இதே போன்றே இந்தியக் குழு சார்பாக அதன் வெளிவிவகார அலுவல்களுக்கான இணை செயலாளர் அகிலேஷ் மிஷ்ரா தலைமை வகிக்கிறார். இப் பேச்சுவார்த்தைக்காக இந்தியா சார்பான குழு நேபாளின் தலைநகரமான காத்மண்டுவுக்கு வியாழன் அதிகாலை வந்து சேர்ந்தது.
மேலும் இப்பேச்சுவார்த்தையின் போது இந்தோ -நேபாள் கூட்டு ஒப்பந்தப்படி இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப் பகுதியில் ரயில் பாதை அமைக்கும் விவகாரம் தொடர்பாகவும் ஆலோசனை நடைபெற உள்ளது.



0 Responses to இச்செய்தியை அனைவருடனும் பகிருங்கள்!