Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ்ப்பாண பெற்றோரும் பிள்ளைகளும்...

பதிந்தவர்: தம்பியன் 30 April 2012

11 வருடம் படித்து 17 புள்ளிபெற முடியா கணித பாடத்தை என்செய்வோம் பராபரமே!

மாணவர்களின் ஒட்டு மொத்த அறிவியலும் ஓங்க வேண்டுமாயின் ஒழுங்கான ஆட்சியும் அரசியலும் நாட்டில் நிலவ வேண்டும்.,

மகிந்த சிந்தனை அதனூடான அறிவுப் பிரவாகம் ஆயிரம் பாடசாலைத் திட்டம் என்ற பட்டோலையின் அமுலாக்கம் தடல் புடலாக நடக்கின்ற வேளையில், க.பொ.த. சாதாரண தரத்தில் கணித பாடத் தின் சித்தி நிலைமையை நினைத்தால் தலை சுற்றும். பொதுவில் 35 புள்ளிகளைப் பெற்றால் அந்தப் பாடத்திற்கு சாதாரண சித்தி வழங்க முடியும் என்பது பொது நியதி.

இருந்தும் மாணவர்கள் குறித்த பாடங்களில் பெற்றுக் கொள்கின்ற புள்ளி வீச்சுக்களின் அடிப்படையில் சாதாரண சித்தி முதல் அதிவிசேட சித்தி வரையான பெறுபேறுகளிடப்படுகின்றன. அந்த வகையில் கணித பாடத்தை சித்தியடைந்த பாடமாக ஏற்றுக் கொள்வதற்கு ஆகக் குறைந்தது 17 புள்ளிகள் மட்டுமே போதும் எனக் கல்வி அமைச்சர் பாராளுமன்றில் தெரிவித்திருந்தார்.

இவ்வாறு 17 புள்ளி பெற்றால் கணித பாடத்தில் சித்தியடைய முடி யும் என்றிருந்த போதிலும்- எத்தனையோ மாணவர்கள் கணித பாடத் தில் சித்தியடையவில்லை.இதனை இன்னும் தெளிவாகக் கூறுவதா யின் மாணவர்களில் பலர் க.பொ.த. சாதாரண தரத்தில் கணித பாடத் தில் 17 புள்ளிகளைக் கூடப் பெறவில்லை என்று கூறிக் கொள்ள லாம்.பதினொரு ஆண்டுகள் பாடசாலையில் கணித பாடத்தை கற்ற மாணவர்கள் ஆகக் குறைந்தது 17 புள்ளிகளைக் கூடப் பெற முடியவி ல்லை என்றால் நிலைமை எப்படி என்பதை ஒரு கணம் சிந்திக்க வேண்டும்.

மகிந்த சிந்தனை அறிவுப் பிரவாகம் என்றெல்லாம் கூறிக் கொள்கின்ற இலங்கைத் திருநாட்டில் மாணவர்களின் கணித ஆற்றல் மகா விழுக்காட்டில் செல்கின்றதெனில், எதிர்காலத்தில் எப்படி அறிவுப் பிர வாகம் இந்த மண்ணில் வெடிக்கும்? கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சிகள், விஞ்ஞானத் தேடல்கள் என அத்தனைக்கும் கணிதம் அடிப்படை. அந்த அடிப்படையில் நாங்கள் படுதோல்வி கண்டுள்ளோம். இந்த தோல்வியில் இருந்து மாணவச் செல்வங்களை மீட்டெடுக்க வேண் டும்.

விருப்பக் குçறாக இருக்கக்கூடிய கணித பாடத்தை விருப்புக்குரிய பாடமாக மாற்ற வேண்டும். இதனைச் செய்வதற்கு அரசியல் தளத் தில் நேர்மையான செயலாக்கங்கள் அவசியம். பேசுவது ஒன்று செய் வது ஒன்று என்பதாக நாட்டின் நடைமுறைகள் இருக்குமாயின், மாணவர்கள் இறுக்கமான பாடங்களில் இருந்து விலக்குப் பெற முற் படுவர்..

அதன் விளைவாக கடினமான பாடத்தில் செல விடவேண்டிய நேரத்தில் இருந்து அவர்கள் விலகிக் கொள்வதற்காக ‘அரசியல் குப்பை களை’ தமது மனச்சாட்சிக்கு சான்றாக்கி படிப்பில் இருந்து தப்பித்துக் கொள்வர். ஆக, கணித பாடம் மட்டுமல்ல; மாணவர்களின் ஒட்டு மொத்த அறிவியலும் ஓங்க வேண்டுமாயின் ஒழுங்கான ஆட்சியும் அரசியலும் நாட்டில் நிலவ வேண்டும்.

ஒப்பீட்டளவில் வடமாகாணம் கல்வியில் முன்னணியில் திகழ்ந்து வந்துள்ளது.

எனினும் பரீட்சை பெறுபேற்றின் மூலம் கல்விப் பொதுத் தராதர உயர்தர வகுப்பில் கல்வி கற்பதற்கு 56.26 வீதமான மாணவர்களே இம்முறை வடமாகாணத்தில் தகுதி பெற்றிருக்கின்றார்கள்.

முதலிடத்தைப் பெற்றுள்ள மேல் மாகாணத்தில் 66.56 வீதமான மாணவர்கள் உயர்தர வகுப்பிற்குத் தகுதி பெற்றிருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வடமாகாணம் கல்வியில் பின்னடைந்திருப்பதற்குப் பல்வேறு காரணங்கள் இருப்பதாக யாழ் பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறை பேராசிரியர் பசுபதி சிவநாதன் சுட்டிக்காட்டினார்.

போருக்குப் பின்னரான காலப்பகுதியில் கல்வி நடவடிக்கைகளுக்காக போதிய வசதிகள் ஏற்படுத்தப்படாமை, பாடசாலை கட்டடங்கள் மற்றும் வசதிகளில் காணப்படுகின்ற குறைபாடுகள், வன்னிப் பிரதேசத்தில் மாணவர்கள் வீடுகளில் கல்வி கற்க வாய்ப்பின்மை போன்ற காரணங்களை அவர் பிரதானமாக குறிப்பிட்டார்.

அத்தோடு புதிதாக அதிகரித்துவரும் கைத்தொலைபேசி பாவனை, நவீன தொழில்நுட்ப தொடர்பாடல் வசதிகள், குறிப்பாக இணையதள பாவனையில் கொண்டிருக்கின்ற ஆர்வம் மற்றும் களியாட்டச் செயற்பாடுகளில் அக்கறை பெருகுகின்றமை என்பனவும் மாணவர்கள் மத்தியில் கல்வி நாட்டம் குறைந்திருப்பதற்கு காரணம் என்று பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலைமையைப் போக்குவதற்குப் பல்வேறு மட்டங்களிலும் விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டுமென்றும் அதில் ஆசிரியர்களின் பங்களிப்பு முக்கியமாக அமைய வேண்டுமென்றும் பேராசிரியர் சிவநாதன் தெரிவித்தார்.

,மாணவர்களின் ஒட்டு மொத்த அறிவியலும் ஓங்க வேண்டுமாயின் ஒழுங்கான ஆட்சியும் அரசியலும் நாட்டில் நிலவ வேண்டும்.,

0 Responses to யாழ்ப்பாண பெற்றோரும் பிள்ளைகளும்...

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com