பின்லேடனின் 3 மனைவிகள் மற்றும் அவரது குழந்தைகள் இன்று அதிகாலை பாகிஸ்தானில் இருந்து சவூதிக்கு நாடுகடத்தப்பட்டனர். அபோட்டாபாதில் வசித்துவந்த பின்லேடன் கடந்த ஆண்டு மே 2-ம் தேதி அமெரிக்க படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதைத்தொடர்ந்து அவரது மனைவிகள் மற்றும் குழந்தைகளை பாகிஸ்தான் அரசு சிறைப்பிடித்தது. நீதிமன்றத்தில் அவர்கள் மீது வழக்குதொடரப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது. தண்டனைக் காலம் முடிந்ததும் அவர்களை நாடுகடத்த பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து அவர்கள் அனைவரும் இன்று காலை சவூதிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். பின்லேடன் சுட்டுக்கொல்லப்பட்ட முதலாமாண்டு தினம் அடுத்த வாரம் வருகிறது. இந்த நிலையில் லேடனின் குடும்பத்தினர் பாகிஸ்தானில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



0 Responses to பின்லேடன் குடும்பத்தினர் சவூதிக்கு நாடுகடத்தல்