Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வெளிநாடுகளில் உள்ள உளவியலாளர்களில் பலர் மனநோய் பிடித்தவர்களை பேய்க்குஞ்சுகளாக கருதி அணுகுவதாக குறிப்பிடப்படுகிறது. இதற்கு நல்லதோர் உதாரணமாக நோர்வேயில் 77 பேரை கொன்ற பெருங் கொலைஞனின் வாக்குமூலம் அமைந்துள்ளது. நோஸ்க் கொலைஞன் பிறீவிக்கை பரிசோதனை செய்ய சென்ற உளவியலாளர் அவரை ஒரு நல்லவர் போலவும், அவருடைய கொலைவெறிக்கு மண்டைப் பிழைதான் காரணமேயல்லாது அவர் காரணமல்ல என்றவாறு அணுகியுள்ளானர். உளவியலாளர் ஆனர்ஸ் பிகார்ஸ் பிறீவிக்கை ஒரு பேய்க் குஞ்சாக தமது மனதில் எடைபோட மறுபுறம் பிறீவிக் உளவியலாளரை பேய்க்குஞ்சுகளாக கருதி நாடகமாடியுள்ளார். கொலைக்குற்றவாளிக்குள் புதைந்துள்ள கொலை வெறியை கண்டறியாது பைத்தியத்தை கண்டறிய அறிக்கை தயாரித்துள்ளார்கள்.

பிறீவிக் சுத்தமான மனநோயாளி என்று கூறிய முதலாவது அறிக்கையில் அவர்; 200 தடவைகள் பொய் கூறியுள்ளார். பைத்தியத்திற்கு வைத்தியம் பார்க்க வந்து தாமே பைத்தியமானது போல இந்த அறிக்கையை உளவியலாளர் தயாரித்த வேடிக்கை நடந்துள்ளது.. இந்த பயங்கரவாத படுகொலை வழக்கில் உயிர் தப்பிய நால்வரின் வாக்கு மூலம் நேற்று முன்தினம் பதியப்பட்டபோது இந்த விவகாரமும் அம்பலத்திற்கு வந்தது. உளவியலாளரிடம் 200 தடவைகள் பொய் கூறி, குற்றத்தில் இருந்து தப்பிவிட முயன்ற கொலையாளி உண்மையாகவே பைத்தியம் இல்லை, மிகப்பெரிய கிரிமினல் என்பதற்கு அந்த முதல் அறிக்கையே போதும் என்றும் அச்செய்தி சுட்டிக்காட்டியுள்ளது. பிறீவிக் மீது நடாத்தப்பட்ட இரண்டாவது உளவியல் அறிக்கை அவர் மீது கொலைக் குற்றத்திற்கான விசாரணை நடாத்தலாம் என்று வழி மொழிந்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் விநோத உடைப் போட்டி கொலைகள் தொடர்ந்த வண்ணமுள்ளன. ஆப்கான் இராணுவத்தின் சீருடையை அணிந்து வந்த தலபான் ஒருவர் நேட்டோ படைவீரரில் ஒருவரை சுட்டுக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இலங்கையில் நடந்த வன்னிப் போரில் புலிகளின் சீருடையுடன் நுழைந்த சிங்கள இராணுவம் அடாவடித்தனங்களை செய்து, மக்களை ஓட விடாமல் தடுத்துவிட்டு அது புலிகள் என்று கதை புனைந்தது போல இந்த சீருடை மயக்கம் உள்ளது. இது இவ்விதமிருக்க நேற்று வியாழன் ஈராக்கின் தலைநகர் பக்தாத்திற்கு சிறிது வெளியே சன்னி முஸ்லீம்களின் காப்பி பாரில் வந்து நின்ற கார் பலத்த ஓசையுடன் வெடித்து சிதறியதில் 15 பேர் அந்த இடத்திலேயே இறந்துள்ளனர். இதுபோல கடந்த செவ்வாய் நைஜீரியாவில் காவல் கடவையில் இருந்தவர்களை நோக்கி வந்த ஜீப் வண்டி பலத்த சத்தத்துடன் வெடித்து நால்வரை பரமண்டலத்திற்கு அனுப்பி வைத்தது. இது தற்கொலைக்குண்டு தாக்குதல் என்று நைஜீரிய அதிகாரிகள் கூறினார்கள்.

மறுபுறம் சட்ட முரணாக கிரேக்கத்திற்குள் நுழைவோர் செங்கன் உடன்படிக்கை வசதியை பயன்படுத்தி பிரான்சிற்குள் வகை தொகையின்றி கொட்டுப்படுகிறார்கள். இரு நாட்டு எல்லைப்பகுதிக்குள் கடவுச்சீட்டு பரிசோதனை இல்லாத காரணத்தால் இந்தச் சுமை பிரான்சின் வயிறு வெடிக்குமளவுக்கு அதிகரித்துள்ளது. நேற்று லக்சம்பேர்க்கில் ஐரோப்பிய ஒன்றிய வெளிநாட்டு அமைச்சர்கள் மாநாட்டில் இந்த விவகாரத்தை மேசையில் போட்டுள்ளது பிரான்ஸ். செங்கன் உடன்படிக்கையில் மாற்றம் இல்லை என்றாலும், சட்ட முரணான வருகைகளை கட்டுப்படுத்த கடவைகளை மூட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளது. வடக்கு ஆபிரிக்காவில் ஏற்பட்டுள்ள போர்கள் பிரான்ஸ், இத்தாலி போன்ற நாடுகளுக்கு பெரும் சுமையாக மாறியுள்ளமை தெரிந்ததே.

விமான நிலையங்களில் பணியாற்றுவோருக்கு மற்றவர்களைவிட மூன்று மடங்கு அதிகமான புற்றுநோய் அபாயம் இருப்பதாக கோப்பன்கேகன் விமான நிலையத்தில் நடாத்தப்பட்ட ஆய்வொன்று தெரிவிக்கிறது. விமானங்கள் வளி மண்டலத்தை அசுத்தம் செய்யும் காரணத்தால் அந்த வளிமண்டலத்தில் இருந்து சுவாசப் பைக்குள் நுழையும் காற்று சுவாசப்பை புற்று நோய்க்கு தூண்டுதலாக அமைகிறது என்றும் குறிப்பிடப்படுகிறது. கோப்பன்கேகன் விமான நிலையத்தில் நீண்ட காலம் பணியாற்றிய இயரிக் ஜாக்கப்சன் என்ற 73 வயது டேனிஸ்காரருக்கு தற்போது சுவாசப்பை அகற்றப்பட்டுள்ளது. தனது சுவாசப்பை புற்று நோய்க்கு விமான நிலைய மாசுபட்ட காற்றே காரணம் என்று இவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

0 Responses to பேய்க்குஞ்சு வேடமணிந்த பெருங் கொலை சந்தேகநபர்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com