தனி ஈழம் குறித்துப் பேச திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு தகுதியில்லை என மதிமுக பொதுச் செயலர் வைகோ பேசினார்.
இது தொடர்பில் அவர் பேசியதாவது:
ஈழத்தில் தமிழர்களை அழிக்க அனைத்து வகையிலும் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு உதவி செய்தது.
மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக உள்ளிட்ட கட்சிகள் எல்லாம் அதற்குத் துணைபோயின.
இலங்கைக்கு ஆயுத உதவி செய்தபோதோ, படுகொலைகள் அரங்கேறிய போதோ அவற்றைத் தடுத்து நிறுத்தக் குரல் கொடுக்காமல் மௌனம் காத்தார் கருணாநிதி.
ஆனால், இப்போது தனி ஈழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று குரல் எழுப்புகிறார்.
தனி ஈழம் குறித்துப் பேச அவருக்கு எந்தத் தகுதியும் இல்லை. என்றார் வைகோ.
ஈழம் குறித்துப் பேச முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு தகுதியில்லை: வைகோ
பதிந்தவர்:
தம்பியன்
26 April 2012



0 Responses to ஈழம் குறித்துப் பேச முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு தகுதியில்லை: வைகோ