Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் தமக்கிடையே சமீபத்தில் நடத்திய பேச்சு வார்த்தை முன்னேற்றகரமானதாகவும்

அமைதி முயற்சிகளை ஊக்கமளிப்பதாகவும் அமைந்துள்ளது என ஐ.நா செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில் இரு நாடுகளும் தமக்கிடையேயான உறவை சாதகமாக்கவும் மேலும் சமாதானம், பாதுகாப்பு, நல்லிணக்கம் ஆகிய விடயங்களில் கவனம் செலுத்தவும் முயற்சி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

பான் கீ மூன் மேலும் கருத்துரைக்கையில் இவ்விரு நாடுகளும் ஆசிய வலயத்தில் மட்டுமல்லாது உலக அரசியல் அரங்கிலேயே செல்வாக்கு செலுத்தும் முக்கிய நாடுகள் எனவும் இரு நாடுகளும் சமாதானத்துக்காக பாடுபடுவது உலக அமைதிக்கு அவசியமான ஒன்று எனவும் கூறியுள்ளார். ஐ.நாவின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் நாளை மூன்று நாள் விஜயமாக இந்தியா செல்லவுள்ளார். இந்நிலையிலேயே மிக முன்னேற்றகரமாக அமைந்துள்ள இந்திய பாகிஸ்தான் பேச்சுவார்த்தை இரு நாடுகளுக்குமிடையே வர்த்தக அபிவிருத்தியை ஏற்படுத்த உள்ளது என இந்திய ஊடகமான PTI எடுத்த பேட்டியில் கூறியுள்ளார்.

இதேவேளை பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி இம் மாதத் தொடக்கத்தில் மேற்கொண்ட இந்தியாவுக்கான பிரத்தியேக சுற்றுப் பயணத்தையும், பிரதமர் மன்மோகன் சிங் உடனான சந்திப்பையும் கூட பான் கீ மூன் பாராட்டியுள்ளார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் தமக்கிடையே காணப்படும் எல்லைப் பிரச்சனையை தீர்க்கும் முகமாக நிகழ்த்தி வந்த அமைதிப் பேச்சுவார்த்தைகள் கடந்த இரு வருடங்களாக முடக்கத்தில் போடப்பட்டிருந்ததுடன் மறுபடியும் கடந்த வருடமே ஆரம்பித்திருந்தன. 2008 இல் மும்பையில் பாகிஸ்தானிலிருந்து ஊடுருவிய தீவிரவாதிகள் கண்மூடித் தனமாக தாக்குதல் நடத்தி 200 இற்கும் மேற்பட்ட மக்களைக் கொலை செய்ததை அடுத்தே இப்பேச்சுவார்த்தையில் தடங்கல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

இவ்விரு நாடுகளும் தற்போது தமது தலைமைத்துவம்,பாதுகாப்பு மற்றும் வர்த்தகம் தொடர்பான தமது உறவினை வலுப்படுத்தி வருகின்றன.

0 Responses to இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்: பான் கீ மூன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com