Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடந்த வருடம் சுட்டுக் கொலைசெய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன்

பிரேமச்சந்திரவின் புதல்வி ஹிருனிகா பிரேமச்சந்திர மற்றும் அவரது ஆதரவாளர்கள் கொழும்பு மேல் நீதிமன்றத்தின் முன்னால் நேற்று நூதனப் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

குற்றவாளியை தெய்வத்தினால் மட்டுமே தண்டிக்க முடியுமெனக் கூறி பாரத லக்ஷ்மன் பிரேமரத்னவின் புதல்வி ஹிருனிகா மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீதிமன்றத்தின் முன் தேங்காய் உடைத்து பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

இச்சம்பவமானது ஊடகங்கள் பலவற்றின் கவனத்தினை ஈர்த்துள்ளதாக அறியமுடிகிறது. கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்தின் முன்னதாக அமைதியான முறையில் எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்ட அவர்கள், பின்னர் தேங்காய் உடைத்து இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இதில் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் ஹிருனிகாவுடன் அவரது தயார் உறவினர்கள் மற்றும் பிரதேச மக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

முன்னதாக தமக்கும் தொலைபேசி வாயிலாக மர்ம நபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்ததாக பாதுகாப்பு வழங்குமாறும் காவற்துறையினரிடம் ஹிருனிகா முறையிட்டிருந்ததாக செய்தி வெளியாகியிருந்தது.

அரசின் முன்னாள் பிரதியமைச்சரான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உட்பட நால்வர் கடந்த வருடம் குழு மோதல் ஒன்றின் போது சுட்டுக்கொல்லப்பட்டனர். இதன் போது படுகாயமடைந்த ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்று வருவதுடன், அவரை கொலைக்குற்றவாளியாக அறிவித்து கைதுசெய்யவேண்டுமென பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் உறவினர்கள் வலியுறுத்திவருகின்றனர்.

இந்நிலையில் பாரத லக்க்ஷ்மன் பிரேமச்சந்திரவின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நால்வர் நேற்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். இதன் போது, கொலைக்குற்றத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் அமைச்சர் துமிந்த சில்வாவை கைது செய்வதற்கு சட்டமா ஆலோசகரின் ஆலோசனையை பெற்றுக்கொள்ளுமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு நீதிமன்றம் மீண்டும் நினைவுபடுத்தியுள்ளது.

மேலும் குறித்த நான்கு சந்தேக நபர்களை தொடர்ந்து மீண்டும் மே 8ம் திகதி ஆஜர் படுத்துமாறுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

0 Responses to குற்றவாளிகளை தெய்வத்தினால் மட்டுமே தண்டிக்க முடியும்! : பாரத லக்க்ஷ்மன் ஆதரவாளர்கள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com