தி.மு.க. தலைவர் கலைஞர் மு.கருணாநிதி தலைமையில் தமிழ் ஈழம் ஆதரவாளர் அமைப்பு (டெசோ) உருவாக்கப்பட்டுள்ளது. இதன் முதல் கலந்துரையாடல் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலத்தில் வரும் 30-ந் தேதி நடைபெறுகிறது.
இலங்கையில் தனி ஈழம் அமையவேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வருகிறது. திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி மீண்டும் டெசோ அமைப்பை உருவாக்கவேண்டும் என்று கருத்து தெரிவித்தார்.
இந்த நிலையில் தி.மு.க. தலைவர் கலைஞர் தலை மையில் தமிழ் ஈழம் ஆதரவாளர் அமைப்பு (டெசோ) உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்பில் உறுப்பினர்களாக தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, திராவிடர் இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன், முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் உள்ளனர்.
இதுகுறித்து தமிழ் ஈழம் ஆதரவாளர் அமைப்பு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில்,
’’தமிழ் ஈழம் ஆதரவாளர் அமைப்பின் (டெசோ) முதல் கலந்துரையாடல் கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் வருகிற 30-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 10.30 மணி அளவில் அமைப்பின் தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் டெசோ அமைப்பின் உறுப்பினர்களான தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, திராவிடர் இயக்க தமிழர் பேரவைத் தலைவர் சுப.வீரபாண்டியன், சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்’’ என்று கூறப்பட்டுள்ளது.



கலைஞர் என்பது கருணாநிதிக்கு மிகவும் பொருத்தமான சொல்லாடல் தான். இது அவரது முத்தமிழ்
புலமைக்காக வழங்கப்பட்ட பட்டம் என்றாலும் , மேடைகளுக்கு ஏற்ப மாறுபட்ட கெட்டப்புகளில் வேசம்
கட்டும் ஒரு மானம் கெட்ட அரசியல் நடிகன் என்பதையே முழுமையாக சுட்டி நிற்கிறது . தன் சொந்த
நலனுக்காக எம் .ஜி. ஆரை கட்சியில் இருந்து தூக்கி வீசுவார், வை. கோ மீது கொலைப்பழி சுமத்துவார்.
ஈழ ஆதரவாளர்களை சிறையில் தள்ளுவார் , சில மணி நேரம் உண்ணாவிரதம் இருந்து அறிக்கை விடுவார்.
பதவியில் இருக்கும் போது ஒரு வேடம் , பதவி இழந்தபின் மீண்டும் மக்கள் ஆதரவை அறுவடை செய்வதற்காக
மறு வேடம் , சாகசம் மிக்க அரசியல் சகுனி கலைஞர் . தேர்தலில் படு தோல்வி , ஸ்பெக்ட்ரம் ஊழல் , வாரிசுகள்
சண்டை என்று கருணாநிதியின் தாரை, தப்பட்டை எல்லாம் கிழிந்து தொங்கிக் கொண்டிருக்கும் இன்றைய
நிலையில் மீண்டும் மக்கள் செல்வாக்கை பெற்றுக்கொள்வதற்கு அவர் கையில் எடுத்திருக்கும் ஆயுதம்
தமிழ் ஈழம். ஈழத்தமிழர் இனக்கொலையை முன்வைத்து சீமான் வீசிய புயல்தான் தன் அதிகாரத்தை
அடித்துச் சென்றது என்பது கலைஞரின் கணக்கு. அந்த புயலை தனக்குச் சாதகமாக்கி மீண்டும்
பதவியை பிடிப்பதற்கு கலைஞர் மேற்கொள்ளும் புதிய நாடகம். அதிகாரம் கிடைத்ததும் , மத்திய அரசின்
கொள்கையே தமிழக அரசின் கொள்கை என்று மானங்கெட்ட அறிக்கை விடுவார் . தமிழர்களே உஷார்.