Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கைக்கு சென்று அங்கு இடம்பெற்ற மதங்களுக்கு எதிரான செயற்பாடுகளுக்கெதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஐக்கிய நாடுகளிடம் கோரியுள்ளது.

ஐக்கிய நாடுகளின் சட்டவிரோத கொலைகள் மற்றும் மத விடுதலை தொடர்பான விசேட நிபுணர் Heiner Bielefelt( ஹெய்னர் பிலபெல்ட்)க்கு இது இந்தக் கோரிக்கையை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.ருத்திரகுமாரன் கடிதம் மூலம் விடுத்துள்ளார்.

இலங்கையில் பௌத்த பிக்குமாரால், முஸ்லிம் பள்ளிவாசல்கள் தாக்கப்படுகின்றன.அண்மையில் தம்புள்ளை பள்ளிவாசல் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. அதேநேரம் இலங்கை அரசாங்கத்தினால் இந்துக்கோயில்கள் மூடப்படுகின்றன.

எனவே உடனடியாக இலங்கைக்கு சென்று பௌத்த மதங்களை தவிர்ந்த ஏனைய மதங்களின் உரிமைகளை பாதுகாக்குமாறு, இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தவேண்டும் என்று ருத்திரகுமாரன் கோரியுள்ளார். அத்துடன் மதங்களை பாதுகாப்பதற்காக சர்வதேச பொறிமுறை ஒன்றும் ஏற்படுத்தப்படவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் பௌத்த பிக்குமார் அதிகாரம் மிக்கவர்களாக கருதப்படுகின்றனர். 1958 ஆம் ஆண்டு தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியமைக்காகவே அப்போதைய இலங்கைப் பிரதமர் பண்டாரநாயக்க பௌத்த பிக்கு ஒருவரால் கொல்லப்பட்டமையை ருத்திரகுமாரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தநிலையில், தற்போது ஏனைய மதங்களுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுப்பதில் இலங்கையின் அமைச்சரவை அமைச்சரான பாட்டலி சம்பிக்க ரணவக்க முன்னின்று செயற்பட்டு வருகிறார்.

தம்புள்ளையில் பள்ளிவாசல் தாக்கப்பட்ட அதேநேரம், திருகோணமலையில் 60 வருட பழமைவாய்ந்த பிள்ளையார் கோயில் ஒன்றை அகற்றுமாறு இலங்கை அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் மன்னார் மடுத்திருப்பதியில் கிறிஸ்தவ பூமிப்பகுதியில் புத்தர் சிலைகளை வைப்பதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக ருத்திரகுமாரன் ஐக்கியநாடுகளின் அதிகாரிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

0 Responses to இலங்கைக்கு சென்று மதசுதந்திரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுங்கள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com