Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கை தம்புள்ளை நகரில் அமைந்துள்ள 80 ஆண்டு பழமை வாய்ந்த ஹைரியா மசூதியை சிங்கள இனவெறியர்கள் சேதப்படுத்தி உள்ளனர்.

இலங்கைக்கு எதிரான ஐ.நா.வின் தீர்மானம் சர்வதேச அளவில் ராஜபக்சே அரசுக்கு ஒரு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த மசூதி இடிப்பு சம்பவம் ராஜபக்சேவின் இனவெறி முகத்தை தோலுரித்துக் காட்டியுள்ளது.

சிங்கள இனவெறியர்களின் இந்த செயலைக் கண்டித்தும், அதற்குத் துணை நிற்கும் ராஜபக்சே அரசைக் கண்டித்தும் சென்னையில் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு இலங்கைத் தூதரக முற்றுகைப் போராட்டம் எனது தலைமையில் நடைபெறும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்திருந்தார்.

இதன்படி இலங்கை தூதரகத்தை முற்றுகையிடச் சென்ற திருமாவளவன் உள்பட 150 பேரை போலீசார் கைது செய்தனர். போராட்டத்தில் இலங்கை கொடி மற்றும் ராஜபக்சேவின் உருவபொம்மைகளும் எரிக்கங்பபட்டன.

0 Responses to திருமாவளவன் உள்பட 150 பேர் கைது! | காணொளி இணைப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com