Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எகிப்தின் முன்னால் அதிபர் முபாரக் பதவியிலிருந்து விலக்கப்பட்டதிலிருந்து அங்கு இராணுவ ஆட்சி நடந்து வருகின்றது.

சமீபத்தில் அங்கு ஜனாதிபதித் தேர்தல் நடை பெறவுள்ள நிலையில் அங்கு இராணுவ ஆட்சியை எதிர்த்து நேற்று அதன் தலைநகர் கெய்ரோவில் ஆயிரக் கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது திடீரென்று இடையில் புகுந்த அரச ஆதரவு குழுக்கள் போராட்டக் காரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் சண்டை மூண்டது. இதைத் தடுக்க இராணுவமும் உள்ளே நுழைந்தது மட்டுமல்லாமல் துப்பாக்கிச் சூடும் நிகழ்த்தப்ப்பட்டது.

இதில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 40 இற்கும் அதிகமான மக்கள் காயமடைந்தனர்.

இக்கலவரத்தை அடுத்து 4 ஜனாதிபதி வேட்பாளர்கள் தமது தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்துள்ளனர்.

0 Responses to எகிப்தில் இராணுவ ஆட்சியை எதிர்த்து பாரிய கலவரம் | 20 பேர் பலி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com