இம்மாதம் 2ம் திகதி ஒஸாமா பின்லேடன் கொல்லப்பட்ட ஓராண்டு நினைவுதினமாகும்.
இதன் பொருட்டு அமெரிக்க படைத்துறையினர் புதிய தகவல்கள் சிலதை வெளியிட்டுள்ளனர்.
பின்லேடன் கொல்லப்பட்டபோது அவருடைய வீட்டில் இருந்த கணினியை எடுத்து சென்ற அமெரிக்கப்படையினர் அதில் பின்வரும் தகவல்கள் இருந்தாகக் கூறுகிறார்கள் :
01. பயங்கரவாத தாக்குதலால் வீணாக பொது மக்கள் கொல்லப்படுவதை பின்லேடன் வெறுத்துள்ளார்.
02. தேவையற்ற கொலைகளை அவர் நிறுத்தும்படி கூறியதை உள்ளே பலர் எதிர்த்தனர்.
03. அதனால் அல் குவைடா அமைப்பு தீவிரப் போக்காளர் – மென் போக்காளர் என்ற இரு பிரிவுகளாக பிளவுபட்டு தடுமாறியது.
04. ஒரு கட்டத்தில் முஸ்லீம்களின் பல்வேறு குழுக்களிலும் மோதல் ஏற்பட்டு பாரிய மரணங்கள் வந்துவிடுமென பின்லேடன் பயந்தார்.
05. அல் குவைடா தாக்குதலை நடாத்தும் வேகத்தை குறைத்த காரணத்தால் ஈரான் கோபப்பட்டது, பாகிஸ்தான் தீவிரவாதிகளும் எதிர்த்தனர்.
06. பயங்கரவாத தாக்குதலை துரிதப்படுத்தும்படி ஈரான் நெருக்குதல் கொடுத்த காரணத்தால் அவர் பெரும் சிரமங்களை சந்தித்தார்.
உள்ளேயும் நெருக்கடி – வெளியேயும் நெருக்கடி.. பின்லேடன் மத்தளம் போல இரு பக்கங்களாலும் அடி வாங்கினார்.
அமெரிக்கா ஆசைப்பட்டது போல பின்லேடனின் கணியில் தகவல்கள் இருந்துள்ளன.
கணினியை பார்த்தவர் யாருமில்லை.. பின்லேடனின் சவத்தையே காட்ட முடியவில்லை.. கணினிக்குள் இருந்ததை காட்டுகிறார்கள்.
இதுதான் இன்றைய அமெரிக்கரின் பின்லேடன் ஸ்பெஷல்..



உங்கள் பதிவுகள் அனைத்தும் நல்லம்
எனக்கும் வலைப்பூ இருக்கிறது பல சுவாரசியமான அம்சங்கள் அடங்கி உள்ளன
www.suncnn.blogspot.com