Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவி அவருக்கு தேவையில்லை என காந்தியவாதி அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.

மராட்டிய மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்கள் அடித்து சாதனை புரிந்துள்ள இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி அளிக்க காங்கிரஸ் பரிந்துரைத்திருந்தது. அதற்கு ஜனாதிபதி பிரதீபா படேலும் ஒப்புதல் அளித்திருந்தார்.

எனினும் இதற்கு ஆதரவை போன்று எதிர்ப்பும் எழுந்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினராக சச்சின் என்ன செய்திட முடியுமென சிவசேனா கட்சியின் தலைவர் பால் தக்கரே குற்றம் சுமத்தியிருந்தார்.

இப்போது காந்தியவாதி அன்னா ஹசாரேவும் சச்சினின் நியமனத்தை எதிர்த்துள்ளார். சச்சினுக்கு ஏன் பாரத ரத்னா விருது கொடுக்கவில்லை என எனக்கு புரியவில்லை. அவரை ராஜ்யசபாவுக்கு அனுப்புவது தேவியற்றது என ஹசாரே கூறியுள்ளார். சச்சினி கிரிக்கெட்டில் செய்து வரும் அளப்பரிய சாதனைகளை அடுத்து அவருக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா வழங்கப்பட வேண்டுமென கோரிக்கை எழுந்தது. எனினும் கடந்த நான்கு வருடங்களாக யாருக்கும் பாரத ரத்னா விருது அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to சச்சினுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி தேவையில்லை | அன்னா ஹசாரே

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com