தமிழர்களின் வரலாற்றில் 1983 ம் ஆண்டு மாறாத வடுகள் கொண்ட நாள் யூலை 23ம் நாள்.
நரமாமிசத்தை நாளாந்தம் பூஐpக்கு ஒரு சிங்களம் அரசியல் கைதிகளாக சிறையில் இருந்த விடுதலை வீரர்களான குட்டிமணி, தங்கத்துரை,nஐகன் உட்பட 52 பேர் துடிக்க துடிக்க சிங்கள வெறிநாய்களால் கடித்துக்குதறப்பட்ட நாட்கள்.
சிங்கள இனத்தையும்,அதன் அரசை நம்பி காலா காலமாய் சிங்கள தேசத்திற்குள் சிங்கள இனத்தை சகோதரர்களாய் எண்ணி வாழ்ந்தவர்ளை
மனித நேயமே சிறிதும் இன்றி அவர்களின் உடமைகளை பறித்து, சொத்துக்களை களவாடியும், நாசம் செய்தும் அவர்களின் உயிரைப்பறித்தும், யாழ்ப்பாணத்திற்கு உடுத்த உடுப்புகளுடன் அதுதான் உங்கள் நிலம் என்று விரட்டித்த காலம்.
சிங்களத்துடன் சேர்ந்து வாழ முடியாது என்றும் தனித்தே வாழ வேண்டும் அதனை உயிர் கொடுத்தே பெறவேண்டும் என்றும் பல்லாயிரம் இளைஞர் யுவதிகள் ஆயுதம் எந்தி போராட நிர்ப்பந்திக்கப்பட்டார்கள் பல்லாயிரக்கணக்கான மக்கள் சொந்த மண்ணை விட்டும், நாட்டை விட்டு உயிர் அச்சத்தால் உலகம் முழுவதும் அகதிகள் என்கின்ற பெயரையும் பெற்றுக் கொண்ட காலம் நேற்று போல் இருந்தது ஆனால் இவை நடந்து முடிந்து 29 ஆண்டுகளாகி விட்டன.
எத்தனை ஆண்டுகளானாலும் தமிழர் நெஞ்சங்களில் ஆறாத வடுக்களை தந்த யூலை மாதம் கறுப்பு யூலை என்கின்ற பெயரைதாங்கிய நாள் பிரான்சு வாழ் தமிழீழ மக்களால் பாரிசின் மனிதவுரிமைகள் சதுக்கத்தில் 23ம் நாள் திங்கட்கிழமை பி. பகல் 3.30 மணிக்கு நினைவு கூரப்பட்டது. பொதுச்சுடானை தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு உறுப்பினர் திரு.விசுவநாதன் அவர்கள் ஏற்றி வைத்திருந்தார். கறுப்பு யூலை நினைவுத்தூபிக்கு மக்கள் மலர் வணக்கம் செய்திருந்தனர்.
முக்கிய பிரமுகர்கள் பிரெஞ்சு, ஆங்கிலம், தமிழ் மொழிகளிலே காணும்வரை தேவையான அரசியல் ரீதியான முன்னெடுப்பை செய்வோம் என இந்நாளில் அனைவரும் உறுதிஎடுத்துக் கொண்டனர். நம்புங்கள் தமிழீழம் நாளைகிடைக்கும் என்ற பாடலுடன் தரக கோசத்துடன் நிகழ்வு சரியாக 6.00 மணிக்கு நிறைவுபெற்றது.





0 Responses to 29 வது ஆண்டு கறுப்பு யூலை 23ம் திகதி பிரான்சில் நினைவு கூரப்பட்டது