Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

லண்டன் சானல்-4 டிவியில் இன்று காஷ்மீரில் நடந்த போர் குற்றக் காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டன.

சுமார் 1 மணி நேரம் ஒளிபரப்பான அந்த ஆவணப் படத்துக்கு காஷ்மீர் டார்ச்சர் டிரெயில் என்று பெயரிடப்பட்டிருந்தது.

லண்டனில் இருந்து சானல்-4 எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்து வருகிறது.

சில மாதங்களுக்கு முன்பு அந்த டி.வி. ஈழத்தில் நடந்த இறுதிக் கட்ட போர் குற்றங்களை ஆவணப்படமாக ஒளிபரப்பியது.

அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு இலங்கைக்கு எதிராக ஐ.நா. சபையில் தீர்மானம் கொண்டு வரவும் வழிவகுத்தது.

காஷ்மீரில் நடந்த ராணுவ குற்றங்கள் அலசப்பட்டிருந்தன.

இந்திய ராணுவ அத்து மீறல் காட்சிகள் டி.வி.யில் வெளியாகி இருப்பதால் ராணுவ உயர் அதிகாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சானல்௪ தொலைக்காட்சி தவிர இங்கிலாந்தில் உள்ள சில பத்திரிகைகளும் பிரதமர் மன்மோகன்சிங் அரசை விமர்சனம் செய்து வருகின்றன.

இதனால் இங்கிலாந்து அரசுடன் பணிந்து போக வேண்டிய நிலை இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே ஐ.நா.சபையில் அடுத்த தடவை நடக்கும் மனித உரிமை மாநாட்டின் போது இந்த விவகாரத்தை கையில் எடுக்க இலங்கை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

0 Responses to இந்தியாவின் போர்க்குற்றங்கள் சனல் 4 வெளியிட்டது (காணொளி இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com