Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்தியாவில் அதிக தடவை தேர்தல்களில் போட்டியிட்ட நபர் எனும் உலக சாதனையை படைக்க வேண்டும் என்பதற்காக தனது 159 வது தேர்தலில், நரேந்திர மோடியை எதிர்த்து சுயேட்சை வேட்பாளராக களமிறங்குகிறார் தமிழகத்தை சேர்ந்த டாக்டர்.கே.பத்மராஜன்.

மோடி போட்டியிடும் வதோதரா தொகுதியில் மோடியை எதிர்த்து களமிறங்குவதற்காக நேற்று வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார் இவர். இதுவரை 158 தேர்தல்களில் பங்கேற்றிருக்கிறார். கடந்த 25  வருடங்களாக இப்பணியை மேற்கொள்கிறார். ஒரு முறை கூட இவர் தேர்தலில் வெற்றி பெற்றதில்லை. எனினும் அதிக தடவை தேர்தலில் எதிர்வேட்பாளராக களமிறங்கியவர் எனும் சாதனையை படைக்க வேண்டும் என்பதற்காக மாத்திரமே தொடர்ந்து வேட்பு மனுத் தாக்கல் செய்வதாக அவர் கூறுகிறார். இதுவரை அவர் தனது கடந்த கால தேர்தல்களில் அடல் பிஹாரி வாஜ்பேய், அப்துல் கலாம், பிரதீபா படேல் என பலரை எதிர்த்து ராஜ்சபா, குடியரசுத் தலைவர் தேர்தல், துணைக் குடியரசுத் தலைவர் தேர்தல் என பல்வேறு தேர்தல்களில் போட்டியிட்டிருக்கிறார். இதற்காக 1988ம் ஆண்டிலிருந்து ரூ 12 லட்சம் செலவழித்திருக்கிறார்.

தற்போது மோடியை எதிர்ப்பதற்காக தமிழ்நாட்டிலிருந்து குஜராத்திற்கு சென்றிருக்கிறார்.  இவர் இப்படி அதிக தடவை தேர்தல்களில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டே தனக்கான பிரபலத்தை பெற்றிருக்கிறார்.

மேட்டூர் தொகுதியில் இவர் சுயேட்சையாக கடந்த 2011ம் ஆண்டு போட்டியிட்ட போது 6,273 வாக்குகளைப் பெற்றிருக்கிறார். இது தான் இவர் அதிக வாக்குகள் பெற்ற தேர்தல் ஆகும்.

0 Responses to தனது 159வது தேர்தலில் மோடியை எதிர்த்து களமிறங்கும் தமிழக சுயேட்சை வேட்பாளர்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com