ஜனாதிபதி தேர்தலில் 52 பேர் செல்லாத வாக்களித்திருப்பது வெட்கமாகவும், வருத்தமாகவும் உள்ளது என்று கருணாநிதி கூறியுள்ளார்.
தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள கேள்வி பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கேள்வி :- குடியரசுத் தலைவர் தேர்தலில் விழுந்துள்ள செல்லாத வாக்குகள் பற்றி?
பதில் :- வெட்கமாகவும், வருத்தமாகவும் உள்ளது. குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களித்தவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களும், சட்டப்பேரவை உறுப்பினர்களும்தான் அப்படி வாக்களித்தவர்களில் 52 பேர் செல்லாத வாக்கு அளித்திருக்கிறார்கள். தமிழகத்தைப் பொறுத்தவரையில் நான்கு பேர் செல்லாத வாக்கு அளித்துள்ளார்கள். இது வருத்தத்திற்குரிய செய்திதானே?
குடியரசுத் தலைவர் தேர்தலில் 52 செல்லாத வாக்குகள்: வெட்கமாகவும், வருத்தமாகவும் உள்ளது: கலைஞர்
பதிந்தவர்:
தம்பியன்
27 July 2012



0 Responses to குடியரசுத் தலைவர் தேர்தலில் 52 செல்லாத வாக்குகள்: வெட்கமாகவும், வருத்தமாகவும் உள்ளது: கலைஞர்