ஓக்ஸ்போர்ட்டில் வைத்து துரத்தி அடிக்கப்பட்டான், மகாராணியின் வெள்ளிவிழாவில் அவமதிக்கப்பட்டன். எந்த அவமானம் வந்தாலும் சிங்கள தேசியவாதத்தை வலியுறுத்தி, இனப் படுகொலையாளி மகிந்தா மீண்டும் ஒலிம்பிக் விளையாட்டு விழாவை மையமாக வைத்து பிரித்தானிய வரும் அவனை போர்முகம் காட்டி எதிர்கொள்வோம்.
அன்பார்ந்த பிரித்தானியா தமிழீழ மக்களே,
நாளை நடைபெறவிருக்கும் மாபெரும் போராட்டத்தில் அனைவரும் கலந்து கொண்டு எமது தலையாய கடமையை செய்யவேண்டும் சிவந்தனின் போராட்டம் நாளுக்கு நாள் வலுப்பெறும் வகையில் பிரித்தானிய மக்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும்.
5 வது நாளில் சிவந்தனின் உண்ணாவிரதம் மக்களின் ஆதரவுடன் தொடர்கின்றது. தளராத மனதுடன் எவ்வித துயர் வரினும் உண்ணாவிரதம் தொடர்வேன் என உறுதியோடு உள்ள அந்த வீரனுக்கு நாம் அனைவரும் எமது பலத்தை வழங்குவோம்.
அனைத்து தமிழ் உறவுகளும் திரண்டு வந்து சிவந்தனுக்கும் தமிழீழப் போராட்டத்திற்கும் வலுச்சோர்ப்போம். தமிழினத்திற்கு சவால் விடும் மகிந்தாவை அடித்து ஒடவைப்போம்.
கண்முன்னே எங்கள் மக்களை கதற கதற உயிரோடு புதைத்து கொலைசெய்த மகிந்தாவை அடித்து துரத்த அணிதிரள்வோம். ஆயிரம், ஆயிரம் எங்கள் மாவீர்களும் மக்களுக்கும் நாம் செய்யும் சிறிய கடமையே இது. தயாராகுங்கள் பிரித்தானிய தமிழீழ உறவுகளே.
மகிந்தாவை துரத்தி அடிப்போம்! ஒன்றிணைந்து போராடுவோம்: யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை அழைப்பு
பதிந்தவர்:
தம்பியன்
27 July 2012



0 Responses to மகிந்தாவை துரத்தி அடிப்போம்! ஒன்றிணைந்து போராடுவோம்: யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை அழைப்பு