Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தென் ஆப்பிரிக்காவின் மாமனிதன் என அழைக்கப்படும் நெல்சன் மண்டேலா இன்று தனது 94வது பிறந்ததினத்தை கொண்டாடுகிறார்.

தென் ஆப்பிரிக்காவின் லட்சிய மனிதர் என வர்ணிக்கப்பட்ட நெல்சம் மண்டேலா தனது 94வது பிறந்ததினத்தை குயன்னூ எனும் கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் கொண்டாடி வருகிறார். தென் ஆப்பிரிக்காவின் விடுதலைக்காக போராடி சுமார் 27 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து பின் அந்நாட்டு அதிபராகவும் பதவி வகித்தவர் நெல்சன் மண்டேலா.

அவரது பிறந்தநாளான இன்றைய நாளை அந்நாட்டு மக்கள் மிக உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். மேலும் நெல்சன் மண்டேலாவின் மனைவி உட்பட அவரின் குடும்பத்தைச் சேர்ந்த 4 தலைமுறையினர் இவ் விழாவில் பங்கெடுத்தனர். 2 கோடி மக்கள் ஒன்றுகூடி இன்று அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து பாடல் பாடி வாழ்த்திருப்பதாக தெரிகிறது. மேலும் அமெரிக்க முன்னால் அதிபர் பிள்கிளிங்டன் நெல்சன் மண்டேலாவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் முன் அறிவிப்பு இன்றி கலந்து கொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். சுமாராக 4 வருடங்களாக பொது நிகழ்ச்சிகளில் ஏதும் பங்கெடுக்காது மறைவில் இருந்த நெல்சன் மண்டேலா இன்று கூடியிருந்த பொது மக்கள் முன்னிலையில் தோன்றினார்.

நெல்சன் மண்டேலாவின் பிறந்த நாளான இன்றைய ஜீலை 18ம் திகதியை மண்டேலா தினம் என ஐக்கிய நாட்டு சபை அறிவித்திருக்கிறது. மேலும் இந்த நாளில் அவரது அறக்கட்டளைகளும், மற்ற பொது நல அமைப்புகளும் அவரது பொதுச்சேவை பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகின்றன. தென் ஆப்பிரிக்க மக்களுக்காக தனது வாழ்க்கையை தியாகம் செய்த நெல்சன் மண்டேலாவுக்கு 1993ல் உலக மத நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாட்டுக்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது குறிப்பிடதக்கது.

0 Responses to 94வது பிறந்ததினத்தை கொண்டாடுகிறார் நெல்சன் மண்டேலா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com