Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அடடா இதெல்லோ பிள்ளை தங்கப்பவுண்

பதிந்தவர்: தம்பியன் 19 July 2012

புலம்பெயர் தமிழர்கள் நன்மைகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே சில தமிழ் இணையத்தளங்கள் செயற்பட்டு வருகின்றன. சட்டவிரோத ஆட்கடத்தலுக்கு துணைபோவதாக எனது பெயரையும் தொடர்புபடுத்தியுள்ளனர். இது எந்த வகையிலும் உண்மையில்லை.

அத்துடன் நாட்டின் நன்மதிப்பிற்கு களங்கத்தினை ஏற்படுத்தும் விதத்தில் இவ்வாறான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இருப்பினும் வடக்கு கிழக்கில் இளைஞர் யுவதிகளுக்கு புனர்வாழ்வு அளித்தல் உள்ளிட்ட அபிவிருத்தித் திட்டங்களில் மட்டுமே நான் பங்கேற்று வருகின்றேன்.

எனினும் தீய நோக்கங்களைக் கொண்ட சிலர் திட்டமிட்ட வகையில் செயற்பட்டு வருகின்றனர். இதேவேளை வடக்கு கிழக்கு மக்களுக்குத் தேவையான சகல வசதிகளையும் அரசாங்கம் வழங்கி வருகின்றது. உயிரைப் பணயம் வைத்து அவுஸ்திரேலியாநோக்கி பயணம் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்துள்ளார்.

தற்போது இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமான முறையில் ஆட்களைக் கடத்துவதன் பின்னணியில் நாமல் ராஜபக்ச இருப்பதாகவும் மக்களிடம் பணத்தினைப் பெற்றுக் கொண்டு கடற்படைக்கு காட்டிக் கொடுத்தும் வருவதாக செய்திகள் வெளியாகியமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to அடடா இதெல்லோ பிள்ளை தங்கப்பவுண்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com