Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சென்னையில் வருகிற ஆகஸ்டு 12-ந் தேதி டெசோ மாநாடு நடக்கிறது. தி.மு.க. தலைவர் கருணாநிதியின் ஏற்பாட்டில் இந்த மாநாடு நடைபெற உள்ளது. இது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் கூறியதாவது:-

இந்த மாநாடு அடுத்த மாதம் (ஆகஸ்டு) 12-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கு போதிய கால அவகாசம் உள்ளது. எனவே இது குறித்து கவனமாக ஆராய்ந்து வருகிறோம். அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

எனக்கு வழங்கப்பட்டுள்ள அழைப்பிதமிழில் இந்த மாநாடு இலங்கையில் தனிநாடு உருவாக்குவது தொடர்பான கலந்துரையாடல் என குறிப்பிடப்படவில்லை. வடக்கு கிழக்கில் போதிய சுயாட்சியுடன் சுய மதிப்புடனும் சுய கவுரவத்துடனும் தமிழ் மக்கள் வாழ்வதற்கான உரிமைகள் குறித்த கலந்துரையாடல் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

0 Responses to டெசோ மாநாட்டில் கூட்டமைப்பு பங்கேற்குமா?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com