Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

லண்டனில் ஒலிம்பிக் போட்டிகள் துவக்க விழா வெள்ளிக்கிழமை (27.07.2012) நடைபெறுகிறது. இப்போட்டியை பிரபலப்படுத்துவதற்காக ஒலிம்பிக் ஜோதி உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது லண்டனை அடைந்துள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் முக்கிய பிரமுகர்கள், விளையாட்டு வீரர்கள் இந்த ஒலிம்பிக் ஜோதியை ஏந்திச் சென்றனர்.

அந்த வகையில் 69-வது நாளாக இன்று (26.07.2012) லண்டனில் நடந்த ஒலிம்பிக் ஜோதி ஓட்டத்தில் பாலிவுட் மெகாஸ்டார் அமிதாப் பச்சன் கலந்துகொண்டு, ஜோதியை ஏந்திச் சென்றார். அவர் வெள்ளை நிற உடை அணிந்து சவுத்வார்க் சாலையில் 300 மீட்டர் தூரம் வரை சென்றார். அப்போது அங்கு உற்சாகமாக திரண்டிருந்த ஏராளமான ரசிகர்களைப் பார்த்து கையசைத்தபடியே சென்றார். ஒலிம்பிக் ஜோதியை ஏந்திச் செல்ல தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பு பெருமை அளிப்பதாக அமிதாப் கூறினார்.

0 Responses to ஒலிம்பிக் ஜோதியை ஏந்திச் சென்ற அமிதாப் பச்சன் - ரசிகர்கள் உற்சாகம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com