இன்று பிற்பகல் பாஜகவின் ஆதரவு பெற்ற குடியரசுத் தலைவர் வேட்பாளரான சங்மா சென்னை வந்தார்.
நேராக போயஸ் கார்டனில் உள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் இல்லத்துக்கு சென்று அங்கு முதல்வரை சந்தித்துப் பேசினார். அங்கு சுமார் 10 நிமிடம் நடைபெற்ற சந்திப்புக்குப் பின் செய்தியார்களை சந்தித்த பிஏ சங்மா, தன்னை முதன்முதலில் குடியரசுத் தலைவர் வேட்பாளருக்கு முன் மொழிந்தது ஜெயலலிதாதான் என்றும் அவர் ஆதரவு தெரிவித்த பின்னரே தனக்கு பலதரப்பிலிருந்தும் ஆதரவு வந்ததாகவும், ஜெயலலிதாவின் ஆதரவு தனக்கு மிகவும் பலம் தந்ததாகவும் அதற்கு நன்றி தெரிவிக்கவே தான் இங்கு வந்திருப்பதாகவும் கூறினார்.
போட்டியில் நீங்கள் ஜெயிப்பீர்களா என்கிற கேள்விக்கு 22ம் திகதி பார்க்கலாம் என்றும் பதில் கூறினார். இதைத் தொடர்ந்து அதிமுக கட்சிக் கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொது செயலாளர் ஜெயலலிதா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற மக்களவை மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டதாக தெரிகிறது.
கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா பிஏ சங்மாவுக்கு வாக்களிக்கவேண்டும் என்றும், வாக்கு செல்லும்படி எப்படி வாக்களிக்க வேண்டும் என்றும் சொல்லிக் கொடுத்ததாகவும் தெரிகிறது. நாளைக் குடியரசுத் தலைவர் தேர்தல் நடக்கவிருக்கும் நேரத்தில் அதற்கான பிரச்சாரம் இன்றுடன் முடிவடைகிறது. அதன்படி, சென்னையில் குடியரசுத் தலைவர் வேட்பாளர் வாக்கு சேகரிப்பை பிரணாப் முகர்ஜி தொடக்கி வைத்திருந்தார். தற்போது சங்மா முடித்து வைத்துள்ளார்.



0 Responses to பிரணாப் ஆரம்பித்து வைத்தார், பி.ஏ.சங்மா முடித்து வைத்தார்