Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜகதீஷ் ஷட்டர் அமைச்சரவையின் அதிருப்தி எம்.எல்.ஏவான குமாரசாமியுடன், சில வேறு எம்.எல்.ஏக்கள் சந்தித்து பேசிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது பற்றி பகிரங்கமாகவே அறிவித்திருக்கிறார் குமாரசாமி. 'பாஜக எம்எல்ஏ க்கள் என்னிடம் வந்து பேசுகிறார்கள். பாஜக கட்சி உடையும் நிலை வந்தால் எனக்கும், அதற்கும் எந்த தொடர்பும் இல்லை' என்று கூறியிருக்கிறார்.

கர்நாடக ஜனதாதாலை சேர்ந்தவர் குமாரசாமி. இவருடன் சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏ க்கள் நான்கு பேர் மறைமுகமாக செயல் படுவதாக முன்னரே தகவல் வெளிவந்திருந்தது. மேலும் ஜெகதீஷ் ஷெட்டரின் அமைச்சரவையில், அமைச்சர்களாக அறிவிக்கப் பட்டவர்களின் இலாகாக்கள் இன்னமும் முழுமையாக ஒதுக்கப் படவில்லை எனவும், ஒதுக்கப்பட்ட சில இலாகாக்களில் திருப்தி இல்லை எனவும் அதிருப்தி நிலவிவருகிறது. அதிருப்தி எம்எல்ஏ க்கள் எதிர்வரும் 27 ம திகதி ரகசியக் கூட்டம் கூடவிருப்பதாகவும் அத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோபாலகிருஷ்ணன் குமாரசாமியுடன் ரகசியத் தொடர்பில் உள்ளதாக மேலும் ஒரு குழப்பம் கர்நாடக பாஜகவில் நிலவிவருகிறது. இந்நிலையில், குமாரசாமியே பகிரங்கமாக பாஜக வில் பிளவு ஏற்பட்டால் நான் பொறுப்பல்ல என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

0 Responses to கர்நாடக பாஜக உடைந்தால் நான் பொறுப்பல்ல: குமாரசாமி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com