Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கிளரி கிளின்டனுக்கு தக்காளி வீச்சு

பதிந்தவர்: தம்பியன் 16 July 2012

நேற்று ஞாயிறு இரண்டு தினங்கள் விஜயமாக எகிப்து சென்ற அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கிளரி கிளின்டனுக்கு தக்காளி வீச்சு நடைபெற்றுள்ளது.

கிளின்டனின் வாகனமும், அவரோடு புறப்பட்ட வாகனத் தொடரணியும் புறப்பட்டபோது ஆர்பாட்டக்காரர் தக்காளி, போத்தல், சப்பாத்து போன்றவற்றை அவருடைய காரின் மீது வீசினார்கள்.

வீசப்பட்ட தக்காளிகளை கிளின்டனின் வாகனம் தடுத்துவிட்டாலும், எகிப்திய அதிகாரி ஒருவருடைய முகத்தில் தக்காளி சரியாக இறங்கியது.

எகிப்தில் வைத்து இராணுவத்திற்கு ஆதரவாக கருத்துரைத்த கிளின்டன், அங்குள்ள அடாவடி இராணுவத்திற்கு நிதி ஒதுக்குவதும் அவசியம் என்று கூறியிருந்தார்.

மேலும் எகிப்தில் ஜனநாயகம் மலர்வது தற்போதைக்கு சாத்தியமில்லை என்று அவர் கூறிய பொன்குஞ்சு கருத்து, எகிப்தில் நடந்த போராட்டத்தையே கேலிக்குரியாக்கியுள்ள நிலையில் தக்காளி எறி பதிலாக புறப்பட்டுள்ளது.

மறுபுறம் :

சிரியா முழுவதும் உள்நாட்டு போர் வெடித்துவிட்டதென அங்கிருக்கும் செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்துள்ளது.

இதுவரை கோம்ஸ், கிட்லிப், காமா பகுதிகளை உள்நாட்டு போர் பரவிய பகுதிகளாக அறிவித்த செஞ்சிலுவைச்சங்கம் இப்போது முழு நாட்டையுமே உள்நாட்டுப்போர் நீக்கமற மூடிவிட்டதாக அறிவித்துள்ளது.

மேலும் போர்க்குற்ற நீதிமன்று கொண்டு செல்லப்பட வேண்டியளவுக்கு குற்றச் செயல்கள் அங்கு நடைபெறுவதாகவும் கூறியுள்ளது.

நேற்று ஞாயிறு சிரிய தலைநகர் டமாஸ்கஸ்சை சுற்றி வெடித்த மோதலில் 55 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள்.

குண்டு வீச்சு, கிரைனைட் துப்பாக்கி, ஆட்டிலறி போன்ற ஆயுதங்கள் பாவிக்கப்பட்டுள்ள.

சிரியாவில் ஏழைகள் அதிகம் வாழும் அல் ரடமொன் பகுதியில் இந்தத் தாக்குதல்கள் கூடுதலாக நடந்துள்ளது.

தலைநகர் டாஸ்கஸ்சில் இருந்து போராளிகளை விரட்ட இந்தத் தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அலைகள்.

0 Responses to கிளரி கிளின்டனுக்கு தக்காளி வீச்சு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com