Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்திய அரசு வெளிநாட்டு முதலீடுகளை பலதுறைகளிலும் கட்டுப்படுத்தியுள்ளதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ள கருத்தினை இந்தியா விமர்சித்துள்ளது.

இந்தியாவில் வெளிநாட்டு முதலீடுகள் மோசமானவகையில் குறைந்துவருவதாக ஒபாமா இந்தியாவின் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த செவ்வியொன்றில் தெரிவித்திருந்தார்.

தொடர்புடைய விடயங்கள்துஷ்பிரயோகம், பருவநிலை மாற்றம், உலகம், சோனியா காந்தி, ஒபாமா
ஒபாமாவுக்கு தகவல்கள் ஒழுங்காக சென்றடையவில்லை என்றும் பாதகமான கருத்துக்களை சர்வதேச தரப்பினர் பரப்பிவருவதாகவும் இந்திய கம்பனிகள் நிர்வாகத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.

குறைந்துவரும் பொருளாதார வளர்ச்சி வீதத்தை சமாளிக்கமுடியாமல் இந்தியா தடுமாறிவருகின்றது.

கடந்த 9 ஆண்டுகளில் மிகக்குறைந்த வளர்ச்சி வேகமாக, 2012இன் முதல் காலாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 5.3 வீதமாக உள்ளது.

‘இந்தியாவின் பொருளாதார அடிப்படை நிலைமைகள் மிகப்பலமாக இருக்கின்றபோது, வோடாஃபோன் போன்ற சில சர்வதேச செல்வாக்கு காரணிகள் இப்படியான கதைகளை பரப்பிவருகின்றன. அதனாலேயே ஒபாமாவுக்கு சரியான தகவல்கள் சென்றடையவில்லை’ என்று அமைச்சர் வீரப்ப மொய்லி சுட்டிக்காட்டினார்.

இந்திய எதிரணிக் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் ஒபாமாவின் கருத்துக்களை விமர்சித்துள்ளனர்.

‘அமெரிக்கா தனது நேரடி முதலீட்டினை இந்தியாவின் சில்லறை வணிகத்தில் செய்ய வேண்டும் என்று நினைத்தால் அது நடக்காது, அது எங்களுக்குத் தேவையில்லை’ என்று பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் யஸ்வந்த் சிங்ஹா கூறியுள்ளார்.

‘அமெரிக்கா இங்குவந்து இந்தியாவின் சில்லறை வணிகத்தில் லாபம் சம்பாதிக்கப் பார்க்கிறது’ என்று மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நிலோத்பல் பாசு தெரிவித்தார்.

ஆனால் இந்தியாவில் முதலீட்டுக்கான வாய்ப்புகள் மோசமடைந்துவருவதையிட்டு அமெரிக்காவின் வர்த்தக சமூகம் கவலைகளை வெளியிட்டுள்ளதாக ஒபாமா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to வெளிநாட்டு முதலீடுகளுக்கு இந்தியா மறைமுகத் தடை: ஒபாமா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com