Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அதிகாரப் பகிர்வு குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு என்னவென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினை அரசாங்கமே நிறுவியது. அதிகாரப் பகிர்வு தொடர்பில் ஆணைக்குழுவில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் புலம்பெயர் தமிழர்களின் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குரல் கொடுத்து வருவதாக ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் தரப்பினர் குற்றம் சுமத்துகின்றனர்.

எனினும், எம்மை விடவும் சில அரசியல் கட்சிகள் புலம்பெயர் தமிழர்களுடன் தொடர்புகளைப் பேணி வருகின்றனர். தமிழ் மக்கள் நாட்டை விட்டு வெளியேறிச் செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

தமிழ் மக்களுக்கு சட்ட ரீதியான உரிமைகளை வழங்குவதன் மூலம் அவர்களின் நம்பிக்கையை வென்றெடுக்க முடியும். தமிழ் மக்களுக்கு விரோதமாக செயற்பட்டு தமிழ் மக்களை அடக்குமுறைக்கு உட்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.

நாடு பாரியளவு கடன் தொல்லையில் சிக்கியுள்ளது. எதிர்கால தலைமுறையினரே இந்த கடன் பளுவை சுமக்க வேண்டியேற்பட்டுள்ளது.

விசாலமான அமைச்சரவையை நாம் கொண்டுள்ளோம் என சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத் தி;ட்ட இரண்டாம் வாசிப்பு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்

0 Responses to அதிகாரப் பகிர்வு குறித்து சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு என்ன?: சம்பந்தன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com