மியான்மர் எதிர்க்கட்சி தலைவர் ஆங் சாங் சூகி தானும் ஓர் இந்திய பிரஜைகளில் ஒருவராக உணருவதாக கூறியுள்ளார்.
டெல்லி வந்துள்ள மியான்மர் எதிர்க்கட்சி தலைவர் ஆங் சாங் சூகி டெல்லியில் உள்ள லேடி ஸ்ரீராம் கல்லூரியில் நடந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது மீண்டும் நான் படித்த கல்லூரிக்கு வந்திருப்பதை எண்ணி பெரு மகிழ்ச்சி அடைகிறேன். எனது ஆசைகளும், எதிர்பார்ப்பும் தவறானவை அல்ல என்று உணர்த்திய இடத்திற்கு நான் மீண்டும் வந்துள்ளேன். இந்தியா மீது நான் கொண்டிருந்த நம்பிக்கை வீணாகிவிடவில்லை என்பதோடு நானும் ஓர் இந்திய பிரஜைகளில் ஒருவர் எனும் உணர்வைத் தருகிறது என ஆழமாக தனது கருத்துக்களை பதிவு செய்தார்.
மேலும் அரசியலில் கொள்கைகளை சமரசம் செய்து கொள்ள நினைப்பவரால் ஈடுபடமுடியாது. ஏனனில் கொள்கையற்ற அரசியல் இந்த உலகத்தில் மிகவும் அபாயகரமானது.
நாங்கள் இன்னும் குடியரசை அடையவில்லை. மியான்மர் மாணவர்களுக்கு கல்லூரி வளாக வாழ்க்கை என்றால் என்ன என்பது இன்றும் தெரியவில்லை. இந்த நிலை மாற நீங்கள் உதவிட வேண்டும். இந்தியாவுடனான எனது நம்பிக்கையும், நட்பும் நியாயமானது என்பதை இங்கு வந்ததிலிருந்து நான் உணருகின்றேன். இந்த நம்பிக்கை நாளுக்கு நாள் ஆண்டுக்கு ஆண்டு பலப்படும். ஜனநாயகத்துக்கான எங்கள் பயணத்தின் கடைசி மைல் வரை இது எங்களுக்கு துணையாக இருக்கும் என்று நான் நம்புகிறேன் எனவும் தெரிவித்திருந்தார்.

0 Responses to இந்தியாவுடன் நான் உணர்வுபூர்வமான பந்தத்துடன் இணைந்துள்ளேன்: ஆங் சான் சூகி