Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யேர்மனி தலைநகர்  பெர்லினில்  பிரிகேடியர் தமிழ்ச் செல்வன் உட்பட அவருடன் வீரச்சாவடைந்திருந்த லெப். கேணல் அலெக்ஸ், மேஜர் கலையரசன், மேஜர் மிகுதன், லெப். மாவைக்குமரன், லெப். ஆட்சிவேல் ஆகிய மாவீரர்களின் 5ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வும் அத்தோடு கடந்த வியாழக்கிழமை மாலை பிரான்ஸ் நாட்டில்  சிங்கள அரசின் நயவஞ்சக செயலால் வீரச்சாவை தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதியும் மற்றும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்ஸ் கிளையின் பொறுப்பாளருமான கேணல் பரிதி (நடராஜா மதீந்திரன்) அவர்களின் வீரவணக்க நிகழ்வு மிக உணர்வுபூர்வமாக நேற்று  நடைபெற்றது .



வணக்க நிகழ்வு மாலை 6 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது. மாவீரர் பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களுக்கும், அவருடன் உயிர்நீத்த ஏனைய மாவீரர்களுக்கும் மற்றும் கேணல் பரிதி அவர்களுக்கும்  ஈகைச்சுடர் ஏற்றப்பட்டன  ..அதனைத்தொடர்ந்து இம் மாவீரர்களுக்கு மக்களால் மலர் மற்றும் சுடர் வணக்கம் செலுத்தப்பட்டு , சிறுவர்களால் கவிதைகள் பாடப்பட்டன .







தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் உன்னத அர்ப்பணிப்பு செய்த மாவீர்களை நெஞ்சில் நிறுத்தி  பிரிகேடியர்  தமிழ்ச்செல்வன் மற்றும் கேணல் பரிதி அவர்களின் நினைவுப் பதிவுகள் காணொளி  ஊடாக  திரையில் காண்பிக்கப்பட்டன . திரையில் காண்பிக்கப்பட்ட நினைவு பதிவுகளை பார்வையிட்ட மக்கள் ஆழ்ந்த சோகத்தில் கண்ணீர் வடித்தனர் .





தொடர்ந்து தமிழர் ஒருங்கிணைப்பு குழு யேர்மனி செயற்பாட்டாளர்கள் சிங்கள நயவஞ்சக செயலை கடுமையாக கண்டித்ததோடு கேணல் பரிதி அவர்களின் வீரச்சாவு எமக்கு சொல்லும் ஆழமான செய்தி என்ன என்ற வகையில் தமது கருத்துக்களை வெளிப்படுத்தினார்கள் .



இறுதியில் எத்தடை வரினும்   எமது தாயக விடுதலை போராட்டத்தை தளராத துணிவோடு தமிழீழம் மலரும் வரை தாங்கிச்  செல்வோம் என உறுதி எடுத்து தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்னும் தாரக மந்திரத்தை அனைவரும் ஓங்கி ஒலித்து உணர்வு பூர்வமாக நிகழ்வு நிறைவடைந்தது.

நன்றி
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு - யேர்மனி 

0 Responses to யேர்மனியில் நடைபெற்ற பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் மற்றும் கேணல் பரிதி அவர்களின் வீரவணக்க நிகழ்வு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com