Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தர்மபுரி அருகே காதல்-கலப்பு திருமணம் தொடர்பாக எழுந்த பிரச்சினையால் கலவரம் ஏற்பட்டது. இதில் தர்மபுரியை அடுத்த நத்தம் காலனி. அண்ணா நகர், கொண்டம்பட்டி ஆகிய கிராமங்களில் உள்ள  குடிசை வீடுகள் தீவைத்து எரிக்கப்பட்டன.
வீட்டில் இருந்த கட்டில், பீரோ, பாய்-தலையணை மற்றும் பொருட்கள் ஆகியவை சேதப்படுத்தப்பட்டன. வீட்டு சமையல் பாத்திரங்கள், படிக்கும் குழந்தைகளின் கல்வி மற்றும் சாதி சான்றிதழ், ரேசன் கார்டு மற்றும் சொத்து பத்திரங்கள் என்று அனைத்து ஆவணங்களையும் தீயில் நாசமாயின.

இப்படி வன்முறையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் இந்த வன்முறையின் சுவடுகள் மறையவில்லை. குழந்தைகள் அதிர்ச்சியில் உள்ளனர். படிப்படியாக பதட்டம் தணிந்து வரும் நிலையில் 3 கிராம மக்களும் ஒன்றாக கூடி சமைத்து சாப்பிட்டு வருகிறார்கள். மேலும் சேதம் அடைந்த வீடுகளை கிராம மக்கள் சரி செய்து வருகிறார்கள்.

0 Responses to உடைமைகளை இழந்த கிராமத்தினர்! ஒருவருக்குகொருவர் ஆறுதல்கூறி சமைத்து சாப்பிட்டும் காட்சி!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com