Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பெண்களே செய்த இறுதி காரியம்!

பதிந்தவர்: தம்பியன் 11 November 2012




ஆண்கள் கைது பயத்தில் இருப்பதால் பெண்களே
எரியூட்ட விறகு கொண்டுவரும் காட்சி



வணங்காமுடி பாமக நிர்வாகி



போலீஸ் கெடுபிடியால் இறுதி சடங்கிற்கு
வர பயப்படும் கிராம பெண்கள்




பாமக நிர்வாகிகள்







நாகராஜ் மனைவி தேன்மொழி








இறுதி காரியம் செய்யும் நாகராஜ் மகன் மணி சேகர்



தர்மபுரி மாவட்டம் நத்தம் கிராமத்தைச் சேர்ந்த இளவரசன் என்பவர், செல்லன்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த திவ்யாவை கடந்த அக்டோபர் 15ஆம் தேதி காதல் திருமணம் செய்து கொண்டார். இதனால் மனமுடைந்த திவ்யா தந்தை நாகராஜ் கடந்த 7ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அவரது உறவினர்கள் நததம் கிராமம், மாறவாடி, அண்ணாநகர், கொண்டம்பட்டி போன்ற பகுதிகளில் உள்ள குடிசைகளுக்கு தீ வைத்தனர். இதில் 154 வீடுகள் சேதம் அடைந்தன.

இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக இதுவரை 117 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 20 பேர் மாணவர்கள் ஆவர். அவர்களை சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் போலீசார் ஒப்படைத்துள்ளனர்.

இதனால் நாகராஜ் இறுதி காரியம் செய்ய கூட ஆள் இல்லாமல் நாகராஜ் உடல் மார்ச்சுவரில் இருந்து வந்தது. 11.11.2012 அன்று பாமக நிர்வாகிகள் மாநில துணைபொது செயலாளர் சரவணன், முன்னால் எம்எல்ஏ வேலுச்சாமி, வெங்கடேசன், அரசாங்கம், வணங்காமுடி, மாது, சாந்தமூர்த்தி, பாரிமோகன், சுப்பரமணியன், மாரிமுத்து போன்ற பாமக-வின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கைது பயத்தால் செல்லன்கொட்டாய் கிராமத்தை சேர்ந்த ஆண்கள் யாரும் நாகராஜின் இறுதி காரியத்தில் கலந்து கொள்ளவில்லை, இதனால் பெண்களே நாகராஜின் இறுதி காரியம் செய்தனர்.

நாகராஜின் உடலை எரிக்க பெண்களே விறகுகளை கொண்டுவந்து அடுக்கினர். எஸ்.பி அஸ்ரா கார்க்  தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடபட்டிருந்தது. நத்தம் கிராமம் வழியாகதான் செல்லன்கொட்டாய்  செல்லவேண்டி இருந்ததால் நத்தம் காலணி வழியாக செல்லும் வாகனங்கள் மிக கடுமையாக சோதனை செய்யப்பட்டது.

படங்கள்: வடிவேல்

0 Responses to பெண்களே செய்த இறுதி காரியம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com