Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிறிலங்கா அரசின் எல்லைதாண்டிய பயங்கரவாதத்தை வன்மையாக கண்டிக்கின்றோம். நேற்று பாரீசில் சிறிலங்கா அரசின் எல்லைதாண்டிய பயங்கரவாதத்திற்கு பலியான தமிழ் தேசிய செயற்பாட்டாளர் பரிதி அவர்களுக்கு எமது வீரவணக்கம்.
தமிழீழ விடுதலைப்புலிகளுடன் 90ம் ஆண்டு வரை இணைந்து தாயகத்தில் சிறிலங்கா ஆக்கிரமிப்பு படைகளிற்கு எதிராக போராடியவரும் பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளருமான நடராசா மகேந்திரன் ( பரிதி )நேற்று இரவு சிறிலங்கா புலனாய்வாளர்களால் பாரிசில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இளையோரை இணைத்து ஒன்றுபட்ட தாயக விடுதலைப் போராட்டத்தை பிரான்சில் முன்னெடுக்க முயன்ற ஒரு தமிழ் தேசிய செயற்பாட்டாளர் சிறிலங்கா அரசின் எல்லைதாண்டிய பயங்கரவாதத்திற்கு இன்று பலியாகியுள்ளார்.

வீரச்சாவை அணைத்துக்கொண்ட பரிதி அவர்களுக்கு எமது வீரவணக்கத்தைச் செலுத்திக்கொள்ளும் இவ்வேளையில் அவரின் பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

0 Responses to பரிதி அவர்களுக்கு வீரவணக்கம் - தமிழ் இளையோர் நடுவம் நோர்வே

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com